சிபிஎஸ்இ 10, 12-க்கு ஏப்.26 முதல் 2-வது பருவ பொதுத் தேர்வு

சென்னை: கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10, 12-ம் வகுப்புபொதுத் தேர்வுகளை 2 பருவங்களாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டது. அதன்படி, முதல் பருவத்தேர்வு நவம்பர் – டிசம்பரில் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2-வது பருவ பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்புக்கான 2-வது பருவ பொதுத் தேர்வு ஏப்.26-ம் தேதி தொடங்கி மே 19-ம்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் தினமும் காலை 10.30 முதல் … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுதலை.. அதிரடி பேட்டி.!!

நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து இன்று விடுதலையானார்.  சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இது குறித்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் … Read more

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்: திருச்சியில் 2 வாரம் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைதானமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள மீன் வலை தொழிற்சாலை நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. 2016-ம் ஆண்டில் நிலம் அபகரிப்பு இந்நிலையில், ஜெயக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது தனது அரசியல் செல்வாக்கை … Read more

இன்று ஜாமினில் விடுதலையாகும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.. புழல் சிறை முன்பு குவியும் அதிமுகவினர்.!!

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்  ஜாமீன் உத்தரவில் தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஜெயகுமார் மீது நில அபகரிப்பு புகார் சம்மந்தமாக வழக்கில் கைது செய்யப்பட்டதால், தற்போது சிறையில் இருந்து வருகிறார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணையில் ஜாமீன் … Read more

வேலூரில் சிமெண்ட் கலவை வாகன இயந்திரம், ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்து.!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற வாகனம் ஆட்டோ மீது கவிழும் சிசிடிவி வெளியாகி உள்ளது. சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி சிமெண்ட் ஜல்லி கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.அந்த லாரி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் இறங்கியது. அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை எந்திரம் பாரம் தாங்காமல் தனியாக கழண்டு சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் … Read more

திருப்பத்தூர்: எருது விடும் விழாவில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, எருது விடும் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 27- ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் எருதுவிடும் விழா மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் எருது விடும் விழா வீராங்குப்பம் கிராமத்தில் … Read more

எனது முடிவுகளில் குடும்பத் தலையீடு இருக்காது – தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி சிறப்புப் பேட்டி

”எங்கள் வார்ட்டில் அடிக்கடி கட்சிக் கூட்டங்கள் நடக்கும். அதனை நான் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அவ்வாறுதான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது” என்கிறார் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றுள்ள க.வசந்தகுமாரி. கல் உடைக்கும் தொழிலாளியின் மகள் வசந்த குமாரி. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர், தமிழகத்தின் இளம்வயது மேயர் என்ற பெருமைக்குரியவராகியுள்ளார். அடித்தட்டு குடும்பத்திலிருந்து வந்துள்ளதால் வசந்தகுமாரியின் பார்வையும், பேச்சும் அம்மக்களை நோக்கியதாகவே உள்ளது. ’இந்து தமிழ் திசை’ … Read more