கொடியேற்றத்துடன் தொடங்கியது..கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா.!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா இலங்கை பக்தர்கள் ஒன்றிணைந்து கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு இவ்வாலய திருவிழா இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் இந்தியாவைச் சேர்ந்த 76 பக்தர்களும், இலங்கையை சேர்ந்த 88 பக்தர்களும் பங்கேற்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து சிலுவைப்பாதை சிறப்பு திருப்பலி மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை காலையில் மீண்டும் இந்தியா-இலங்கை பக்தர்கள் … Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ: அணைக்க முடியாமல் திணறல்

கொடைக்கானல்: கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள் கருகிவருகின்றன. பரவிவரும் காட்டுத்தீயை அணைக்க நவீன உபகரணங்கள் இல்லாததால் தீ பரவுவதை தடுக்கமுடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இரவில் குளிர்ந்த வானிலை காணப்பட்டாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்துவருகிறது. கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திலையில், கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு … Read more

டி23 புலியை பிடிக்க 11 லட்ச ரூபாய் செலவு! வனத்துறை தகவல்.!

டி23 ஆட்கொல்லி புலியை பிடிக்க 11 லட்ச ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய டி23 என்ற புலி நான்கு பேரை கொன்றது. இந்த டி23 ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆட்கொல்லி புலியை பிடிக்க கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி தொடங்கிய பணி அக்டோபர் 15ஆம் தேதி வரை நீடித்தது. இறுதியாக 15ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி … Read more

சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்: எம்.பி. தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு விமான சேவை தொடங்குவது குறித்து சேலம் எம்.பி. தலைமையில் நடந்த விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுர விமான நிலையத்தில், மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தில் இயக்கப்பட்ட சேலம் – சென்னை பயணியர் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே திட்டத்தில் மீண்டும் விமான சேவையைத் தொடர விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சேலத்தை சேர்ந்த … Read more

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் ஸ்கீம்… ராஜஸ்தான், சத்தீஸ்கர் வழியில் தமிழகம்?

அண்மையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள், அம்மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவருவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால், தமிழகத்திலும்புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்கள் மட்டுமல்லாமல், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பழைய ஓவ்யூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்காக மாநில தலைமைச் … Read more

நூல் விலை உயர்வு! குமாரபாளையத்தில் 15 நாட்கள் ஜவுளி உற்பத்தி வேலை நிறுத்தம்.!

நூல் விலை அதிகரிப்பால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி குமாரபாளையத்தில் 15 நாட்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நூல் விலை உயர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 15 நாட்கள் நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் தரப்பில், விசைத்தறிகளில் காட்டன் ஜவுளி ரகங்கள் உற்பத்தி … Read more

ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் – உயர்நீதிமன்றம்

ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் நிலமோசடி வழக்கில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் – உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் நிலமோசடி வழக்கில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு ஜெயக்குமார் மீதான 3 வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது – விரைவில் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு   Source link

மார்ச் 11: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,710 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.10 வரை மார்ச்.11 மார்ச்.10 … Read more