மார்ச் 11: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,710 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.10 வரை மார்ச்.11 மார்ச்.10 … Read more

‘இதயத்தில் ரத்தம் கசிகிறது’ குலாம் நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை

காங்கிரஸ் கட்சிக்கு இந்த நெருக்கடி புதிதல்ல – 2014 முதல் நடந்த 45 தேர்தல்களில் 5-ல் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை வேறு ஒரு விஷயம், தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வழக்கமான பல்லவி கூட இல்லை. மாறாக, விரக்தியையும் வருகிற ஆபத்தை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் செயற்குழுக் கூட்டம் விரைவில் வரவிருக்கும் வழியைப் பற்றி விவாதிக்கப்படும் என்று சமிக்ஞை செய்தார். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை! தமிழக அரசு தகவல்.!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள், அதனால் உயிரிழந்தவர்கள் விவரங்கள், குணமடைந்தவர்கள் விவரங்கள் என பல்வேறு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.  தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 13-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more

புதுச்சேரியில் இம்முறையும் இடைக்கால பட்ஜெட்தான்: கடும் நிதி நெருக்கடியின் பின்புலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறையும் இடைக்கால பட்ஜெட்டுக்காக அம்மாநில சட்டப்பேரவை இம்மாத இறுதியில் கூடுகிறது. புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலை மாறி, மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதிலும், கடந்த கால புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டன. உரிய நேரத்தில் … Read more

பெண்களே திருமணத்தில் கவனமுடன் இருங்கள்… பிரபல சீரியல் நடிகை பகீர் பேட்டி

Serial Actress Shalini Life Incident Update : சின்னத்திரையின பிரபல நடிகை ஷாலினி கணவரால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றும் அவரால் அனுபவித்த டார்ச்சர் குறித்து வெளிப்படியாக பேசியுள்ள இன்டர்வியூ தொடர்பான வீடியோ பதிவு யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின், ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வி கேர்ள்ஸ் மற்றும் காமெடி நிகழ்ச்சியில் பலவற்றில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. மேலும் சன்டிவி மற்றும் ஜெயா டிவியில், ஒளிபரப்பான சீரியல்களில் … Read more

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு! வேளாண்மைத் துறை அறிவிப்பு.!

இயற்கை வேளாண் மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட வேளாண் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இயற்கை வேளாண்மை, வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பங்கள், வேளாண் தொழிலுக்கு உகந்த புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, விளைபொருள்கள் ஏற்றுமதி உள்ளிட்டவத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஊக்குவித்து பரிசளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021-22ஆம் ஆண்டில் புதிய … Read more

சிறையில் சொகுசு வசதிகள் பெற அதிகாரிகளுக்கு 2கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கு-சசிகலாவிற்கு முன்ஜாமீன்

சிறையில் சொகுசு வசதிகள் பெற அதிகாரிகளுக்கு 2கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, இளவரசிக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவும் இதனை உறுதி செய்தது. இதனையடுத்து ஊழல் தடுப்பு அமைப்பினர் சசிகலா … Read more

கிராம மக்களுக்கான இரு திட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை தரவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “லட்சக்கணக்கான கிராம மக்களைச் சென்றடையும் இரு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, முன்னெடுத்து வெற்றி பெறச் செய்யவேண்டும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், ”விளிம்புநிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின பழங்குடி மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான 3 … Read more

ஹேப்பி நியூஸ்… இந்த மாதம் ஆல்யா மானசா- அய்லா டபுள் கொண்டாட்டம்!

Alya Manasa Sanjeev Update : சமீப காலமாக சின்னதிரையில் ஜோடியாக நடித்து வரும் பல ரியல் ஜோடிகள் தங்கள் நிஜ வாழ்விலும் இணைந்து வருகின்றனர். ஆனால் இதற்கு முதல் அடித்தளம் அமைத்தது என்றால் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடியை சொல்லலாம். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமான இவர்கள் இருவரும் அந்த சீரியலின் அடையாளமாகவே மாறிவிட்டனர். ரீல் காதலர்களாக சீரியலில் சேர்ந்த இவர்கள், காலப்போக்கில் ரியல் ஜோடிகளாக மாறி திருமணம் செய்துகொண்டனர். … Read more