கிராம மக்களுக்கான இரு திட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை தரவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “லட்சக்கணக்கான கிராம மக்களைச் சென்றடையும் இரு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, முன்னெடுத்து வெற்றி பெறச் செய்யவேண்டும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், ”விளிம்புநிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின பழங்குடி மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான 3 … Read more

ஹேப்பி நியூஸ்… இந்த மாதம் ஆல்யா மானசா- அய்லா டபுள் கொண்டாட்டம்!

Alya Manasa Sanjeev Update : சமீப காலமாக சின்னதிரையில் ஜோடியாக நடித்து வரும் பல ரியல் ஜோடிகள் தங்கள் நிஜ வாழ்விலும் இணைந்து வருகின்றனர். ஆனால் இதற்கு முதல் அடித்தளம் அமைத்தது என்றால் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடியை சொல்லலாம். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமான இவர்கள் இருவரும் அந்த சீரியலின் அடையாளமாகவே மாறிவிட்டனர். ரீல் காதலர்களாக சீரியலில் சேர்ந்த இவர்கள், காலப்போக்கில் ரியல் ஜோடிகளாக மாறி திருமணம் செய்துகொண்டனர். … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது-அதிமுக கடம்பூர் ராஜூ.!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார், அப்போது பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்கக் கூடியது. பாரதப் பிரதமர் மோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் ஆனதிலிருந்து இந்த கருத்தை கூறி வருகிறார். ஒரே நாடு ஒரே … Read more

ஆரணியில் நகரக் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து மோசடி.. வங்கித் தலைவர், மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது.!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரக் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்துக் கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக வங்கித் தலைவர், மேலாளர் உள்ளிட்ட 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரே பெயர்களில் பலமுறை போலி நகைகளை அடகு வைத்துக் கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியதில் மொத்தம் இரண்டு கோடியே 30 இலட்ச ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், … Read more

பால் கொள்முதல் விலையை உயர்த்துக: தமிழக அரசுக்கு வலியுறுத்தி உற்பத்தியாளர்கள் தீர்மானம்

சேலம்: ‘பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி தருவதோடு, அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்’ என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பொருளாளர் ராமசாமி மற்றும் சட்ட ஆலோசகர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் … Read more

ரசிகர் மரணம் – நடிகர் ரஜினிகாந்த் கூறிய ஆறுதலும் வாக்குறுதியும்!

நடிகர் ரஜினிகாந்த் தனது முதன் முதலாக ரசிகர் மன்றம் தொடங்கிய முத்துமணி மரணத்திற்கு ஆறுதல் கூறியதுடன் அவரின் மகள் படிப்பு உள்ளிட்ட செலவுகளை பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு ஆரம்ப காலகட்டத்தில் முதல் முதலாக முத்துமணி என்பவர் மதுரையில் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். இவர் சமீபத்தில் உடல் நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த நிலையில் முத்துமணி மனைவி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முத்துமணி மறைவிற்கு ஆறுதல் … Read more

உன்னை நினைச்சதுக்கு இதுதான் தண்டனையா? இன்றை சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பொழுதுபோக்காவும், அதே சமயம் பரபரப்பை ஏற்படுத்துவதில் சீரியல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. காலை முதல் இரவு வரை தொடர்ச்சியான ஒளிபரபரப்பாகும் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் சீரியல்களுக்கு தனி இடம் உண்டு. வார நாட்களில் சீரியல்கள் ஒளிபரப்பாவது போல வார இறுதியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகினறனர். இந்த … Read more

மார்ச் 14ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

புதுச்சேரியில் மார்ச் 14ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதன் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் … Read more

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை -சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தொற்றால் மரணங்கள் ஏதும் இல்லாத நிலை எட்டப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 327 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் … Read more

மார்ச் 11: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,710 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more