தருமபுரியில் குடிசை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மருந்துகள் கொண்ட ஊசிகள் பறிமுதல்.!

தருமபுரி மாவட்டத்தில், குடிசை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மருந்துகள், ஊசிகளை மருந்து கட்டுபாட்டு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், மருந்து கட்டுபாட்டு துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில், கோம்பேரி கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல், வலி நிவாரணி மருந்தை போதை ஊசியாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஏலகிரி கிராமத்தை சேர்ந்த முருகேசன் வீட்டில் … Read more

மார்ச் 15-ல் அமமுக 5-ம் ஆண்டு தொடக்க விழா: கட்சி தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை: அமமுகவின் 5-ம் ஆண்டு தொடக்க விழா மார்ச் 15-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக் கொடியினை ஏற்றயிருப்பதாகவும், அமமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக, எதற்கும் அஞ்சாத இரும்புப் பெண்மணியாக, ஏழை – எளிய மக்களின் நலம் காத்த ஏந்தலாக திகழ்ந்த ஜெயலலிதாவின் திருவுருவத்தை கொடியில் தாங்கியும், கொள்கைகளை … Read more

ஒன்றுபட்டு இருந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும்! – வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 10-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பாஜகவின் தொடர் வெற்றி… காங்கிரசின் தொடர் தோல்வி… உணர்த்துவது என்ன?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் … Read more

நீங்க கண்டிப்பா டிரை பண்ண வேண்டிய அற்புதமான அரிசி ஹேக்ஸ் இங்கே!

மிகவும் பிரபலமான தானியங்களில் ஒன்றான அரிசியை பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில சுவாரஸ்யமான அரிசி ஹேக்குகள் இங்கே உள்ளன. வாசனை நீங்க ஒரு கிண்ண அரிசியை ஃபிரிட்ஜில் அல்லது உங்கள் சமையலறை அலமாரிகளில் வைக்கவும். இது துர்நாற்றத்தை உறிஞ்சிவிடும். மசாஜ் செய்வதற்கு sports injury சூடான, சமைத்த அரிசியை மஸ்லின் துணியில் கட்டி, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இது அதிசயங்களைச் செய்கிறது. சீக்கிரம் சமைக்க பழுப்பு அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும். … Read more

மக்கள் ஆதரவு மக்கள் பக்கம் இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது – குஷ்பு டிவிட்டர் பதிவு..!

மக்கள் ஆதரவு மக்கள் பக்கம் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன என குஷ்பூ தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், பஞ்சாப்பை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், பிரதமரின் திட்டத்தை அடிமட்ட மக்கள் வரை … Read more

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட நில அபகரிப்பு, திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது என மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார், ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில், திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்து போட வேண்டும் என்ற … Read more

மேகதாது அணை விவகாரம் | மார்ச் 15-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம்: வேல்முருகன்

சென்னை: நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழக மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 15ம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சனையான காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து … Read more

“அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று மாவட்ட ஆட்சியர்களை இன்று சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது ஆட்சியர்களிடையே அவர் பேசுகையில், “மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை அதை இணைத்து தெரிவிக்க வேண்டும். எங்களுக்கும் உங்களுக்கும், அதாவது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து … Read more

பளபளப்பான சருமத்துக்கு ஃபுரூட் ஃபேஷியல்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் தான்.. எப்படினு பாருங்க!

நம் சமையலறையில் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பிரகாசத்தை பெற உதவுகிறது. சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. சில சமயங்களில் ஃபுரூட் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே’ பார்லர்களில் நிறைய பணத்தை செலவிடுகிறோம். ரசாயனம் இல்லாத மேக்-ஓவருக்கு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம். வாழைப்பழ ஃபேஸ் பேக் வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் … Read more

திருமணமான ஐந்தே நாளில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறை விசாரணை..!

விரும்பமின்றி திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு கடந்த 4ம் தேதி ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சேலத்தில் இருந்து  சொந்த ஊருக்கு திரும்பியுள்ளபனர். இந்நிலையில், கடந்த ஏழாம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு  பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு … Read more