“அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று மாவட்ட ஆட்சியர்களை இன்று சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது ஆட்சியர்களிடையே அவர் பேசுகையில், “மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை அதை இணைத்து தெரிவிக்க வேண்டும். எங்களுக்கும் உங்களுக்கும், அதாவது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து … Read more

பளபளப்பான சருமத்துக்கு ஃபுரூட் ஃபேஷியல்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் தான்.. எப்படினு பாருங்க!

நம் சமையலறையில் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பிரகாசத்தை பெற உதவுகிறது. சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. சில சமயங்களில் ஃபுரூட் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே’ பார்லர்களில் நிறைய பணத்தை செலவிடுகிறோம். ரசாயனம் இல்லாத மேக்-ஓவருக்கு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம். வாழைப்பழ ஃபேஸ் பேக் வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் … Read more

திருமணமான ஐந்தே நாளில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறை விசாரணை..!

விரும்பமின்றி திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு கடந்த 4ம் தேதி ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சேலத்தில் இருந்து  சொந்த ஊருக்கு திரும்பியுள்ளபனர். இந்நிலையில், கடந்த ஏழாம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு  பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு … Read more

இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதிய கார்… நிலைதடுமாறி விழுந்த தம்பதி… மனைவி உயிரிழப்பு – நிற்காமல் சென்ற கார்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கார் மோதிய கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பழனி மருத்துவ நகரைச் சேர்ந்த பாண்டி – பாப்பாத்தி தம்பதி, மலை அடிவாரத்தில் கடை வைத்துள்ளனர். வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புறவழிச்சாலையில், பின்னால் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தம்பதி … Read more

’மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை’ – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை, மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’கடந்த 1974-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவித … Read more

நில அபகரிப்பு புகாரிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

அதிமுக முன்னாள அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் … Read more

ஜெயக்குமார் இன்று ரிலீஸ்? நில அபகரிப்பு வழக்கிலும் ஜாமின்

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவினருடன் சேர்ந்து அவருடைய சட்டையை கழற்றி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இருப்பினும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து … Read more

இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்.. கைது செய்த போலீசார்.!

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வாலிபர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரில் அருண் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் அருணும், அவரது சகோதரரும் இணைந்து ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும் அந்தப் பெண்ணிற்கு கட்டாய தாலி கட்ட அருண் முயற்சித்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு … Read more

சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் கொடுத்த வழக்கு: சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன்

பெங்களூரு: சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் சிறப்புச் சலுகை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்த ஓய்வு பெற்ற … Read more

கொடைக்கானலில் பரவும் காட்டுத்தீ – தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரம்

கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதிகளான தோகை வரை, மயிலாடும் பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரியத் தொடங்கிய காட்டுத்தீ, இன்று அதிகாலை முதல் மயிலாடும் பாறை, மயில் … Read more