நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்.!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி (நேற்று) வரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் என்பதால் நேற்று வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலில் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறித்து மாநில தேர்தல் … Read more

கடன் வாங்கித் தருவதாக கூறி சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 பெண்களிடம் 13 லட்ச ரூபாய் மோசடி ; இளைஞர் கைது <!– கடன் வாங்கித் தருவதாக கூறி சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 ப… –>

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 பெண்களிடம் 13 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர். சுய உதவிக்குழுவை சேர்ந்த 33 பெண்களின் ஆதார், வங்கி எண்களை பெற்ற சதீஷ்குமார் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் அதை வழங்கி பெண்களுக்கு கடன் பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 33 பேரையும் தனித் தனியாக சந்தித்து வேறொருவருக்கு வர வேண்டிய பணம் தங்கள் … Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் ஆண்டுதோறும் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி,மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங் கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அனுமதி … Read more

அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்… தடுக்க உதவும் 7 வழிகள் இவைதான்!

Steps to  prevent breast cancer Tamil News: உலகில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோய் மாறியுள்ளது. இந்திய விகிதத்தின்படி, மார்பகப் புற்றுநோய் இறப்பு மகப்பேறு இறப்பு விகிதத்தை விட 1.7 மடங்கு அதிகமாக உள்ளது. மார்பக புற்றுநோய் நிலைமையின் மோசமான நிலையைக் குறிக்கிறது. ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு இந்தியப் பெண் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கும் ஒரு இந்தியப் பெண் புற்றுநோயால் இறக்கிறார். எனவே, மார்பக புற்றுநோயை அதன் ஆரம்பகாலத்திலே கண்டறிதல் … Read more

இன்றைய (05.2.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

இன்று நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது

சென்னை தி.நகரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை அரசுக்கு ஆளுநர் தனியே அனுப்பியிருக்கிறார்; இதை இதுவரை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.  நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு … Read more

குடியால் கெட்ட கூட்டாளி தலையில் குத்திய கத்தியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குடிமகன்..! கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் <!– குடியால் கெட்ட கூட்டாளி தலையில் குத்திய கத்தியுடன் ஆஸ்பத்… –>

சேலம் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட ஆத்திரத்தில்  நண்பரை கத்தியால் விரட்டி விரட்டி குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. தலையில்  குத்தப்பட்ட  கத்தியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம், குண்டத்து மேட்டில் உள்ள அரசு மதுபான கடை ஒன்றில் வியாழக்கிழமை இரவு சவுந்தரராஜன் என்பவர், மூன்று நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அதில் சக்திவேல் என்ற நண்பர் சவுந்தர்ராஜனிடம் கடன் வாங்கி பல மாதங்களாக திருப்பி … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புனு தாக்கல் நிறைவு; 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு60 ஆயிரம் பேர் மனு தாக்கல்: கடைசி நாளில் விறுவிறுப்பாக மனுக்களை அளித்த வேட்பாளர்கள்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம்தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான … Read more

தள்ளுமுள்ளு!நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, திரண்டு வந்த வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.