யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள்’ ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் மாநாட்டில் ஸ்டாலின் கட்டளை

Tamilnadu CM Stalin Speech : யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள் என்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர், ஐபிஎஸ், வனத்துறை, அலுவலர்கள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தின் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளை உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், நமது மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சூழல் … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்.!!

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்  ஜாமீன் உத்தரவில் தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஜெயகுமார் மீது நில அபகரிப்பு புகார் சம்மந்தமாக வழக்கில் கைது செய்யப்பட்டதால், தற்போது சிறையில் இருந்து வருகிறார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணையில் ஜாமீன் … Read more

ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கெட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள்.. கூடுதலாக பேருந்துகளை இயக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் தனியார் பேருந்தின் படிக்கெட்டுகளில் தொங்கியபடியும் மேற்கூரையில் அமர்ந்தும் பயணித்து வருகின்றனர். மாங்கோட்டை-கறம்பக்குடி செல்லும் தனியார் பேருந்துகளில் காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். விபத்துகள் ஏதும் நிகழ்வதற்கு முன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமெனவும் … Read more

2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு: தமிழக காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் தகவல்

சென்னை: தமிழ்நாடு மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் இணைந்து காசநோய் குறித்த கருத்தரங்கம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் டாக்டர் ஆஷா பேசும்போது, ‘‘காசநோய் பாதிப்பை படிப்படியாகக் குறைக்கமத்திய, மாநில அரசுகள் தொடர்ந்துபல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் காசநோய் பரிசோதனைகள் மையங்கள் இருக்கின்றன. இதேபோல், ஆரம்ப சுகாதாரமையங்களிலும் காசநோய் பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான, … Read more

இரவில் வெதுவெதுப்பான பாலுடன் ஒரு ஸ்பூன் நெய்… இவ்ளோ நன்மை இருக்கு!

Ghee milk benefits in tamil: நெய் நம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக இருந்து வருகிறது. இது நமது பாரம்பரிய உணவுகளின் சுவையை அதிகப்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவது வரை என கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டு வைத்தியத்திற்கும் சரியான மூலப்பொருளாகவும் உள்ளது. இப்படி நம்முடைய வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வரும் நெய்யை நீங்கள் எப்போதாவது ஒரு சூடான கிளாஸ் பாலில் நெய் சேர்த்திருக்கிறீர்களா?. இந்த கலவை நிச்சயம் … Read more

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.! அதிர்ச்சியில் படக்குழு.!!

சூர்யா நடிப்பில் நேற்று வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகள் அமைந்துள்ள பாடலை நீக்க வேண்டும் என அகில இந்திய நேதாஜி கட்சி தெரிவித்துள்ளது.  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து நேற்று வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் பாடல் ஆசிரியர் யுகபாரதி  உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இப்பாடலை படத்தில் … Read more

25 அடி உயரத்தில் தொடர்ந்து 8 நிமிடங்கள் தொங்கியபடி யோகாசனம் செய்து சிறுமி சாதனை

விருதுநகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் 25 அடி உயரத்தில் தொங்கியபடி வளையத்திற்குள் உடம்பை வில் போன்று வளைத்து சாதனை படைத்துள்ளார். உயரத்தில் தொங்கியபடி வாளை கிழியாசனம் என்கிற ஆசனத்தை தொடர்ந்து 8 நிமிடம் செய்து சாதனை படைத்த சிறுமிக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர்.  Source link

இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ‘யுவிகா’ இளம் விஞ்ஞானி திட்டப் பயிற்சி முகாம் மே 16 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் … Read more

Rasi Palan 11th March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 11th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 11th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 11ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more