கணவர் யோகி உடன் திடீரென வெளிநாட்டுக்கு பறந்த மைனா.. எங்கே போயிருக்காங்க தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி. தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா பணியை தொடங்கினார். அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் … Read more

ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள்! 17-ஆம் தேதி முதல்கட்ட ஆலோசனை.!

ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.  அதில் ஒவ்வொரு தொழிற்சங்கம் சார்பாக ஒரு நிர்வாகியை இணைத்து பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் … Read more

சேலம்: சாலை விபத்தில் இறந்த நண்பரின் நினைவு நாளில் ரத்த தானம் வழங்கி  விழிப்புணர்வு

சேலம்: சேலம் அருகே சாலை விபத்தில் சிக்கி ஏராளமான ரத்தம் வெளியேறியதால் மரணமடைந்த இளைஞரின் நினைவு நாளில், அவரது நண்பர்கள் ரத்த தானம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கை.புதுார் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சீனிவாசன் (26 ) திருச்சியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி திருச்சியில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, நடந்த … Read more

JEE Exam: 21 ஏழை மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நெல்லை கலெக்டர் விஷ்ணு!

தூத்துக்குடியில் புதன்கிழமை காலை விமானத்தில் ஏறிய அரசுப் பள்ளியில் படிக்கும் 21 ஏழை மாணவர்களுக்கு அதுதான் முதல் விமானப் பயனம். அந்த மாணவர்களால் தாங்கள் விமானத்தில் பறக்கப்போகிறோம் என்பதை நம்பமுடியவில்லை. ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வரும் 21 ஏழை மாணவர்களையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தனது சொந்த செலவில் விமானத்தில் அனுப்பிவைத்து அவர்களை லட்சியக் கனவில் மிதக்க வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக உள்ள வி. விஷ்ணு ஐ.ஏ.எஸ், 2012ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி … Read more

தமிழக பட்ஜெட் மக்களுக்கானதாக இருக்கும்! இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி.!

தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.  மேலும்  குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குதல் போன்ற மீதி இருக்கும் வாக்குறுதிகளை … Read more

”என் மகன் விவசாயத்தில் ஈடுபடுவார்” – பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் நெகிழ்ச்சிப் பேட்டி

திருப்பத்தூர்: ”விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டுள்ள என் மகன், தற்போது பொருளாதார வசதி இல்லாததால் வரும் காலங்களில் கண்டிப்பாக விவசாயத்தில் ஈடுபடுவார்’’ என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பேரறிவாளன் (52). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, சிறுநீரக தொற்று, மூட்டு வலிக்கு மருத்துவ சிகிச்சை பெற இருந்ததால் கடந்த … Read more

பார்ட்டிக்கு போலாம்னு பாத்தா சொதப்பிட்டியே பூமி… இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes Update ; சின்னத்திரை ரசிகர்களுக்கு வாரம் முழுவதும் பொழுதுபோக்காக அமைவது சீரியல். அதே வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும், திரைப்படங்களும் பொழுதை கழிக்க உறுதுணையாக இருக்கிறது. இதில் ரியாலிட்டி ஷோக்கள் இளைஞர்களை கவர்ந்தாலும் இல்லத்தரசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவது சீரியல்கள். இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான இளைஞர்களும் சீரியல் ரசிகர்களாக மாறிவிட்டனர். ஒரே கதைகளத்தை கொண்டு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களுக்கு சீரியல் மீதான மோகம் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். … Read more

பராமரிப்பு பணி! ஈரோடு முதல் கோவை வரை ரயில் சேவை ரத்து.!

ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் காரணமாக ஈரோடு முதல் கோவை வரையிலான ரயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும், 14ல் சோமனூர் – வாஞ்சிபாளையத்தில், பாலம் கட்டுமானப்பணி நடைபெற இருப்பதால், மார்ச், 12ஆம் தேதி புறப்பட்டு, 14ஆம் தேதி கோவை வந்து சேர வேண்டிய லோகமான்ய திலக் – கோவை விரைவு ரயில், ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்: புதுச்சேரி பாஜக

புதுச்சேரி: “காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்“ என்று புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கருத்து கூறியுள்ளார். நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம் இன்று மாலை நடந்தது. அண்ணா சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மிஷன் வீதி வரை மேளதாளங்கள் முழங்க நடத்தப்பட்டது. இதில் மகளிர் அணி சார்பில் பாரத மாதா வேடம் அணிந்தும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பாஜக தொண்டர்கள் … Read more