திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை! டிடிவி தினகரன் கருத்து.!

திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று   வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத்தொடர்ந்து எஞ்சிய ஆறுபேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ‘பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய சிறைக்கைதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்துவிடுவோம்’ என்று கூறி மக்களை ஏமாற்றிய … Read more

இன்னைக்கு நெட்ஃப்ளிக்ஸ்-ல் என்ன பார்க்கலாம்? கார்த்தி சிதம்பரம் சரவெடி ட்வீட்

Congress MP Karthik Chidambaram Twitter Post Viral : இந்தியாவில் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில், உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல கட்டங்களாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. … Read more

ராமேஸ்வரத்தில் அதிகாரிகள் நடத்திய தீடீர் சோதனையில், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 56 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்.!

ராமேஸ்வரத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய தீடீர் சோதனையில், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 56 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுர மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையிலான அதிகாரிகள், ராமேஸ்வரம் நகரில் உள்ள கடைகளில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 20க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து 135 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத மிக்சர், ஸ்வீட் பாக்கெட்டுகளையும், காலாவதியான உணவு பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் … Read more

மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை பத்திரமாக ஒப்படைத்த புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்!

புதுச்சேரி: மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை ஆட்டோ ஓட்டுநர் பத்திரமாக ஒப்படைத்தார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் தன்னுடைய மருமகளை மருத்துவப் பரிசோதனைக்காக புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். பின்னர், ஆட்டோவை திருப்பியபோது எதிரில் டூவீலர் நிறுத்தி இருந்த பகுதியில் 500 ரூபாய் நோட்டு கட்டு சாலையில் கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது அது ரூ.50,000 கட்டு என்பது தெரிந்தது. அப்பணக்கட்டை எடுத்து அதை நேராக … Read more

தேசிய கட்சியாக மாறுகிறதா ஆம் ஆத்மி கட்சி?

இந்த தேர்தலில் பாஜகவைத் தவிர ஆம் ஆத்மி கட்சி மட்டுமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அக்கட்சி பஞ்சாபில் 91 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மேலும், கோவாவில் 2 இடங்களுடன் தனது கணக்கைத் தொடங்கி 6% வாக்குகள் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் 2022-ம் ஆண்டு உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் … Read more

தற்கொலைக்கு முயன்ற பெண் காவல் உதவி ஆய்வாளர்… காவல்துறை தீவிர விசாரணை..!

பெண் காவல் உதவியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் காவல் நிலையத்தில் காவல்  உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லெட்சுமி.  நேற்று இவர் ரவுண்டானா அருகில் பணியில்  ஈடுப்படிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.  அவரை மீட்ட உடனடிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விசாரணையின் போது அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து … Read more

விழுப்புரத்தில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இளைஞர் பலி.!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸும் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் ஜெகநாதன் ஆகிய இளைஞர்கள் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர். ஒதியத்தூரில் இளைஞர்கள் சென்ற பைக்கும் திருக்கோவிலூரில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையை நோக்கிச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இளைஞர்கள் முன்னே சென்ற டூரிஸ்ட் வேனை முந்திச் … Read more

மார்ச் 10: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,598 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.9 வரை மார்ச்.10 மார்ச்.9 … Read more

"மாணவர்களுக்கு ஆட்சியர்கள் வழிகாட்டியாக திகழ வேண்டும்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாணவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் வழிகாட்டியாக திகழவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய முதலீடுகள் வருவதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட சட்டம் ஒழுங்கு முக்கியம் என்றார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்றும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான … Read more

ஐஸ் வாட்டர், நோ உப்பு… ஒரு வாரம் வரை இட்லி மாவு புளிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!

Tamil Lifestyle Update : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக ருசிப்பது இட்லி. இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்றான இட்லி மருத்துவ குணங்களை நிறைந்தது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக உள்ளது. ஆனால் இட்லி சமைக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. இட்லி சமைக்கும்போது அது சாப்ட்டாக இருக்க வேண்டும். மாறாக கடினமாகவோ அல்லது பாதி மாவாகவே இருந்தால் இட்லி மீதுளள ஆர்வமே … Read more