ஆடுதுறை பேரூராட்சி : சிக்கலில் சிக்கிய தேர்தல் அலுவலர் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

 தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களில் பாமக 4 இடங்களிளும், திமுக 4 இடங்களிளும், அதிமுக 2 இடங்களிளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மதிமுக 1,  சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சி தலைவராக வேண்டுமெனில் 8 பேரின் ஆதரவு தேவை. பாமக சார்பில் வெற்றி பெற்றுள்ள வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினும், மதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும் களமிறங்கினர்.  இதில், பாமகவின் ம.க.ஸ்டாலின் அவர்களுக்கு … Read more

தமிழகத்திலும் பா.ஜ.க. விரைவில் ஆட்சியமைக்கும் -அண்ணாமலை சூளுரை

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பா.ஜ.க. விரைவில் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று கட்சி இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது என்றார். முன்னதாக, தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். Source link

தமிழகத்தில் இன்று 129 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 44 பேர்: 354 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,598. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,899. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 86,07,248 பேர் வந்துள்ளனர். சென்னையில் 44 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

ஸ்டாண்ட்அப் காமெடியன் டு பஞ்சாபின் அடுத்த முதல்வர்! பகவந்த் சிங் மானின் பயணம்!

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 19ம் தேதி ஆம் ஆத்மி கட்சி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. போன் மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில் 2.15 மில்லியன் பேர் பதிலளித்ததாகவும் அதில் 93% அதிகமான வாக்குகள் பகவந்த் சிங் மானுக்கு கிடைத்தது என்று ஆம் ஆத்மி கூறியது. அவர் தனது கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையை “உண்மையான பஞ்சாபை மீட்பதற்கான போர்” என்று ஷாஹீத் பகத்சிங் பெயரில் சத்தியம் செய்து, … Read more

BREAKING : 4 மாநிலங்களில் ஆட்சியமைக்கும் பாஜக- பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.!

4 மாநிலங்களில் ஆட்சி அமைக்க உள்ள பாஜகவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் … Read more

கள்ளக்குறிச்சியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது.!

கள்ளக்குறிச்சி அருகே, சாலையில் போவோர், வருவோரை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரனூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே, இளைஞர் ஒருவர் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாகத் தாக்கி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் பிடிக்க முற்பட்டபோது அந்த இளைஞர் கத்தியுடன் கீழே விழுந்ததில் கைவிரல் ஒன்று துண்டானது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் … Read more

முறைகேடாக பதவி உயர்வு: கரூரில் 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்

கரூர்: முறைகேடாக பதவி உயர்வு வழங்கிய 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த மாதம் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தண்டனையில் (பனிஷ்மென்ட்) இருந்த ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, அப்பணியிடத்தை காலியிடமாக காட்டி பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதனை ஆசிரியர் சங்கங்கள் அப்போது சுட்டிக் காட்டியபோதும் நடவடிக்கை எடுக்காமல், இதுதொடர்பாக … Read more

திரும்ப திரும்ப தோத்துட்டே இருக்கியேடா … இன்றைய ட்ரெண்டிங் தேர்தல் ரிசல்ட்ஸ் மீம்ஸ்

Tamil Election results memes in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்றைய இணைய பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய தேர்தல் முடிவு தொடர்பான மீம்ஸ்கள் சிலவற்றை … Read more

நான்காவது இடத்தில பாஜக, முன்றாவது இடத்தில் காங்கிரஸ்.! இது வேற மாறி தேர்தல் முடிவு.!

உத்தரபிரதேசம் மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல், பஞ்சாப் மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி பாஜக நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 266 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சி 132 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  பிரியங்கா காந்தி பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. … Read more

சக எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த வீரர்.. அவரது உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.!

மேற்குவங்கத்தில் சக எல்லை பாதுகாப்பு படை வீரரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல், அவரது சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேற்குவங்க எல்லையில் ஞானசேகரனுக்கும் அவருடன் பணியாற்றி வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சக வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடந்த 7-ம் தேதியன்று இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு உயிரிழந்தனர். இந்நிலையில் அங்கிருந்து சொந்த ஊருக்கு  கொண்டுவரப்பட்ட ஞானசேகரனின் உடலுக்கு முன்னாள் … Read more