நான்காவது இடத்தில பாஜக, முன்றாவது இடத்தில் காங்கிரஸ்.! இது வேற மாறி தேர்தல் முடிவு.!

உத்தரபிரதேசம் மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல், பஞ்சாப் மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி பாஜக நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 266 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சி 132 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  பிரியங்கா காந்தி பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. … Read more

சக எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த வீரர்.. அவரது உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.!

மேற்குவங்கத்தில் சக எல்லை பாதுகாப்பு படை வீரரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல், அவரது சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேற்குவங்க எல்லையில் ஞானசேகரனுக்கும் அவருடன் பணியாற்றி வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சக வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடந்த 7-ம் தேதியன்று இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு உயிரிழந்தனர். இந்நிலையில் அங்கிருந்து சொந்த ஊருக்கு  கொண்டுவரப்பட்ட ஞானசேகரனின் உடலுக்கு முன்னாள் … Read more

சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில்தான் இந்த ஆட்சியின் மதிப்பீடு உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “இந்த ஆட்சியினுடைய மதிப்பீடு என்பது சட்டம் – ஒழுங்கினைப் பராமரிப்பதில்தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு தொடங்கியது. இன்று காலை மாநாட்டில் பேசிய முதல்வர், “மாவட்ட அளவில் உள்ள உண்மையான … Read more

சாலை விபத்து: வேலைக்குச் சென்ற அரசு பேருந்து நடத்துனர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

செங்கல்பட்டு அருகே; இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துநர்கள் இருவர் உயிரிழப்பு. செங்கல்பட்டு ஜோதி பிரகாஷ் (45) என்பவரும், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த நந்தகோபன் (55) என்பவரும் சென்னை மத்திய மாநகர பேருந்து பணிமனையில் நடத்துநர்களாக பணியாற்றி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்குச் சென்று வரும் இவர்கள், செங்கல்பட்டு அரசு பணிமனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்த சென்று கொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, … Read more

கத்திக்குத்து வாங்கிய கண்ணம்மா… காப்பாற்றுவாரா பாரதி?

Bharathi Kannamma Serial Promo Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும், டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறிய இந்த சீரியல் தற்போது அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் எளிதில் யூகிக்கக்கூடிய வகையிலான திரைக்கதை மற்றும் ஒரு உண்மையை … Read more

#BREAKING : ஒரு லட்சம் வாக்கு வித்தியாசம்., மீண்டும் அரியணை ஏறும் யோகி ஆதித்யநாத்.!

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.  காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், உத்திர பிரதேச மாநில முதல்வர் … Read more

சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.. முதலமைச்சர் அதிரடி

சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் எனவும், பொதுமக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவற்களை ஒடுக்குவதில் காவல்துறை பாரபட்சம் காண்பிக்கக் கூடாது எனவும் முலலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டை முதலமைச்சர்  தொடங்கி வைத்து உரையாற்றினார். இன்று தொடங்கிய இந்த மாநாடு வருகிற 12-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. Source link

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம்

கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி பெருந்திருவிழா நேற்றிரவு கிராமசாந்தியுடன் தொடங்கியது. இன்று கொடியேற்றத்தையொட்டி கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரம் முன்பு அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், விநாயகர் உள்ளிட்ட அனைத்து உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளினர். கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, கொடிமரத்துடன் சுற்றப்பட்டு, தர்ப்பைப் … Read more

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம்  – கோகுல்ராஜ் வழக்கறிஞர் உறுதி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம் என்று கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஆஜாரான வழக்கறிஞர் மோகன் தெரிவித்துள்ளார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சிலைக்கு, வழக்கறிஞர் ப.பா மோகன் மற்றும் பல்வேறு அமைப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ப.பா மோகன், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்காருக்கும், பெரியாருக்கும், சமூக நீதிக்கும் … Read more

40 வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு… வைரலாகும் சிஎஸ்கே கேப்டனின் வீடியோ!

MS Dhoni Tamil News: 15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் துவங்க 16 நாட்கள் உள்ள நிலையில், தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளும் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. … Read more