#BigBreaking || சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க போகும் பாஜக.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. மாலை 3.00 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக 4 மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.  இதில், கோவா மாநிலத்தில் பாஜக சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தற்போது 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. … Read more

5 மாநிலங்களில் 4-ல் வெற்றி என்பது பாஜகவின் நல்லாட்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்: ஜிகே வாசன்

சென்னை: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 4-ல் வெற்றி என்பது, பாஜக-வின் மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பாஜக-வின் வெற்றி பெரிதும் பாராட்டுக்குரியது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் … Read more

முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி மாணவி: ஓடிவந்து உதவிய எம்எல்ஏ

மாற்றுத் திறனாளி மாணவியின் கோரிக்கையை ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உடனடியாக நிறைவேற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா, தான் பள்ளிக்குச் சென்றுவர மிகவும் சிரமப் படுவதாகவும் அதனால் நாற்காலி ஸ்கூட்டரை வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இதை அறிந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தன்னுடைய சொந்த … Read more

கணவருடன் பெங்களூருவில் முடங்கிய சேகர்பாபு மகள்: கர்நாடக அமைச்சருடன் சந்திப்பு

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி தனது காதல் காணவருடன் பெங்களூரு சென்று கர்நாடக அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு கோரியுள்ளார். தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி (24) காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவர் சதீஷ் (27) உடன் சென்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவை பெங்களூருவில் புதன்கிழமை சந்தித்து தனது குடும்பத்தினரிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியிருகிறார். அமைச்சர் … Read more

இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுங்கள் – முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையில் கூடுதல் தலைமை இயக்குனர்கள் நிலையில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகள் காவல்துறை தலைமை இயக்குனர்களாக (டி.ஜி.பி)  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வு இவர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களையும் சேர்த்து தமிழ்நாடு காவல் துறையில் தலைமை இயக்குனர்கள் நிலையிலான அதிகாரிகள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. தமிழக காவல்துறையில் கூடுதல் தலைமை இயக்குனர்கள் நிலையில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகள் … Read more

ஈரோடு கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மாடுகள் விற்பனை

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மாடுகள் விற்பனையாகின. தமிழகத்தில் இரண்டாவது பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு வாரந்தோறும் வியாழக்கிழமையில்  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறும். இதன் படி இன்று சந்தைக்கு நாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை மற்றும் கன்று குட்டிகள் என 600 … Read more

தமிழக காவல்துறையில் மூத்த அதிகாரிகளின் சேவையை பரவலாக்குக: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் காவல்துறையில் மூத்த அதிகாரிகளின் சேவை பரவலாக்கப்பட வேண்டும் என்று பாஜக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக காவல்துறையில் கூடுதல் தலைமை இயக்குனர்கள் நிலையில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகள் காவல்துறை தலைமை இயக்குனர்களாக (டி.ஜி.பி) பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வு இவர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களையும் சேர்த்து தமிழ்நாடு காவல் துறையில் தலைமை இயக்குனர்கள் நிலையிலான அதிகாரிகள் எண்ணிக்கை 16 ஆக … Read more

'தாயும் மகனும் நிம்மதியாக தூங்குவர்!'- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 9-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘30 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளனுக்கு ஜாமீன்… தாமதம் செய்வதை எப்படி ஏற்பது எனக் கேட்ட உச்சநீதிமன்றம்! … Read more

சென்னை 2-வது விமான நிலையம் அமைவது எங்கே? 4 இடங்களில் ஆய்வு!

சென்னையில், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கிரீன்ஃபீல்ட் வசதியை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்ட நான்கு சாத்தியமான தளங்களை ஆய்வு செய்து வருகிறது. மீனம்பாக்கத்தில் தற்போது உள்ள வசதிகளுடன் கூடுதலாக புதிய விமான நிலையம் நகருக்கு அருகில் செயல்படும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு’ திருப்போரூர், பாரந்தூர், பண்ணூர், படலம் ஆகிய நான்கு இடங்கள் தமிழக அரசால் … Read more

40 எம்.எல்.ஏ.,க்களை இழக்கும் பாஜக.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.! 

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. பகல் 1.30 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 269 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில், கடந்த 37 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் இரண்டாவது  முறையாக ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை இந்த தேர்தலின் மூலம் பாஜக முறியடித்து இரண்டாவது  முறையாக அரியணை எறியுள்ளது பாஜக … Read more