சூப்பர் சான்ஸ்… முதல்வர் ஸ்டாலின் ஆபீஸில் வேலை; மாதம் ரூ60,000 ஊதியம்; தேர்வு முறை எப்படி?

Tamilnadu Chief minister fellowship programme 2022 details: தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.60000 ஊதியமாக வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுத் தகவல்களை இப்போது பார்ப்போம். 2022-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டத்தை (TNCMFP) செயல்படுத்துவதற்கான ஆணைகளை மொத்தமாக ₹5.66 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு … Read more

அசோக் லேலண்ட் கம்பெனியில் 10வது, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.!

அசோக் லேலண்ட் அதிகாரபூர்வ இணையதளத்தில் வாகன உற்பத்தி செயல்பாடுகள் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சிவகங்கை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : அசோக் லேலண்ட் பணியின் பெயர் :  வாகன உற்பத்தி செயல்பாடுகள் கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ பணியிடம் : கிருஷ்ணகிரி, சென்னை தேர்வு முறை … Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு தங்கம் சவரன் ரூ.40,000க்கும் கீழ் குறைந்தது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது சென்னையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ.39,280க்கு விற்பனையாகிறது Source link

மத்திய அரசின் எதிர்ப்பை ஏற்க மறுப்பு: பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் மாதம் ஒருமுறை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த பெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2000-ம் … Read more

இளைஞர் கொலை வழக்கு: 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

காளையார்கோவில் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மறவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த 04.02.2022-ம் தேதி புரசடை உடைப்பு டாஸ்மாக் செல்லும் பாதையில் கொலை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட அமர்த்தியா பாண்டியன், அருண் குமார் மற்றும் செல்லப்பாண்டி … Read more

திமுக எம்.பியின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திமுக எம்.பி.யின் மகன் சாலை விபத்தில் இன்று (மார்ச் 10) அதிகாலை உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் (22) இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரை ஓட்டிக் கொண்டு வந்தபோது சாலை தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற நபர் பலத்த காயங்களுடன் … Read more

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலையே நிலவும்..!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். அதேபோல,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 12.03.2022: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13.03.2022; தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை … Read more

பூந்தமல்லி அருகே மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான கோவில் குளத்தை மீட்ட அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் குளத்தை அதிகாரிகள் மீட்டனர். அகரம்மேல் ஊராட்சியில் 40 சென்ட் நிலத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த மூக்குத்திக் குளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண் கொட்டி மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி மூடப்பட்ட குளத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாவட்ட கவுன்சிலர் மற்றும் … Read more