திமுக எம்.பியின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திமுக எம்.பி.யின் மகன் சாலை விபத்தில் இன்று (மார்ச் 10) அதிகாலை உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் (22) இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரை ஓட்டிக் கொண்டு வந்தபோது சாலை தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற நபர் பலத்த காயங்களுடன் … Read more

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலையே நிலவும்..!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். அதேபோல,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 12.03.2022: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13.03.2022; தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை … Read more

பூந்தமல்லி அருகே மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான கோவில் குளத்தை மீட்ட அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் குளத்தை அதிகாரிகள் மீட்டனர். அகரம்மேல் ஊராட்சியில் 40 சென்ட் நிலத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த மூக்குத்திக் குளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண் கொட்டி மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி மூடப்பட்ட குளத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாவட்ட கவுன்சிலர் மற்றும் … Read more

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரம்; உச்ச நீதிமன்றம் தனது கடமையை செய்துள்ளது: சட்ட வல்லுநர்கள் கருத்து

சென்னை: கடந்த 32 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியிருப்பதன் மூலம் உச்ச நீதிமன்றம் தனது கடமையைச் செய்துள்ளது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சட்டவல்லுநர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் கூறியதாவது: ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றநீதிபதி கே.சந்துரு: 32 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார். மாநில … Read more

சிக்னலில் நின்றிருந்த 'பைக்' வேகமாக மோதிய கார்: பகலில் நிகழந்த மோசமான விபத்து

ஈரோட்டில் சிக்னலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஈரோட்டில் சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு முன்னால் நின்று கொண்டிருந்த மினிபஸ் மீதும் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருமலைசாமி, கார் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். ஈரோட்டின் முக்கிய சாலை சந்திப்பாக பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு உள்ளது பிரம்மாவை, காந்திஜி சாலை,பார்க் சாலை மற்றும் கச்சேரி வீதி ஆகிய சாலைகளை சந்திக்கும் சாலையில் 24 மணிநேரமும் … Read more

Russia-Ukraine crisis today live: 700 இந்தியர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

Go to Live Updates உக்ரைன் நாட்டின் சுமி நகரில் இருந்து மீட்கப்பட்ட 700 மாணவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர். சுமியில் தண்ணீர், உணவு, மின்சாரம் இன்று தவித்து வந்த இந்திய மாணவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் நேற்று மீட்டு அண்டை நாட்டின் எல்லைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் இந்திய விமானங்கள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். நாட்டுக்காக உயிர் நீத்த நடிகர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து நடிகர் பாஷா லீ ஆயுதம் ஏந்தி போராடினார். … Read more

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.. முன்னிலை நிலவரம்.!!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், உத்தரகண்டில் 70 தொகுதிகள், 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 தொகுதிகளுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு … Read more

ராமேஸ்வரம் தீவில் மிளகாய் பொடியுடன் சுற்றும் கடத்தல் கும்பல்..! டாட்டூ கலைஞர் காயங்களுடன் தப்பினார்

ராமேஸ்வரம் அருகே டாட்டூ கடை உரிமையாளர் மீது மிளாகாய் பொடி தூவி காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்ற மர்ம கும்பல் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் அப்துல்கலாம் நினைவில்லம் அருகே லெபனோன் என்பவர் டாட்டூ எனும் பச்சை குத்தும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 3 ந்தேதி இரவு 7 மணிக்கு இவரது கடைக்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் தங்கள் கைகளில் … Read more

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முன்னிலையில் 12 தொழில் பிரிவு திறன் கவுன்சில்களுடன்: திறன் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம்

சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில், 12 வகையான தொழில் பிரிவு திறன் கவுன்சில்களுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்காரம், அழகு மற்றும் நலம், வீட்டுப் பணியாளர்கள், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உணவு பதனிடுதல், நகைகள் மற்றும் கற்கள், பசுமைப் பணிகள், தோல் பதனிடுதல், … Read more