முதிய தம்பதியர் கைக்கடிகாரம் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு : முதியவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
கோயம்புத்தூர் அருகே கைக்கடிகார விற்பனை கடையில் கண்ணிமைக்கும் நேரத்தில் கைக்கடிகாரத்தை திருடிச் சென்ற முதிய தம்பதியர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே செல்போன் உதிரிபாகங்களுடன் கைக்கடிகாரங்கள் கூடிய கடை வைத்திருப்பவர் மலைக்கொழுந்து. இவர் கடை வாசலில் நின்றிருந்த முதியவர் ஒருவர், கைக்கடிகாரத்தை எடுத்து மறைத்து வைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. Source link