பேரறிவாளன் ஜாமீன் ஆறுதல் தருகிறது; இழந்த 30 ஆண்டுகளைத் திரும்பப் பெற முடியுமா? – வைகோ

சென்னை: “பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது“ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் எந்தத் தவறும் செய்யாதவர். ராஜீவ் காந்தி படுகொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்தக் குற்றமும் செய்யாமல், முப்பதாண்டுகள் இளமை வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. தொடக்க காலத்தில் அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார். அவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு இருந்தார். பேட்டரி வாங்கிக் கொடுத்தார் … Read more

`ஆணவக்கொலைய யாராலும் தடுக்க முடியாது!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 8-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை… சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து … Read more

20 நிமிட சந்திப்பு: ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் பேசியது என்ன?

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபி.எஸ் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 20 நிமிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பேசியது என்ன என்பதுதான் அரசியலில் ஆர்வம் உள்ள பலரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ள விஷயமாக உள்ளது. அதிமுக … Read more

மதிமுக பொதுக்குழு! 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தலமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி கால 10 மணிக்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம், கட்சியில் காலியாக உள்ள தலைமை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 … Read more

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா.! 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 12ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. 15ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 15ம் தேதி மாலை கள்ளழகர் எதிர்சேவையும்,16ம் … Read more

திருப்பத்தூர் அருகே கி.பி.8-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான கிபி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். க. மோகன் காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூரை அடுத்த கொரட்டி கிராமத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான நடுகல்லினை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் முனைவர்.க.மோகன்காந்தி … Read more

வேலூர்: நடந்துசென்றபோது திடீரென கீழேவிழுந்து இறந்த மாணவன் – சதியா என போலீஸ் விசாரணை

வேலூர் மாவட்டத்தில் நடந்துசென்று கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள மதர் தெரசா கல்லூரியில் விடுதியில் தங்கி B, SC பிசியோதெரபி முதலாமாண்டு படித்து வருகிறார் கோகுல்ராஜ். 19 வயதான இவர் இன்று மாலை 05:40 மணியளவில் கல்லூரி முடிந்து மைதானத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்துள்ளார். பின்னால் நடந்து வந்த B. Pharm மூன்றாம் ஆண்டு மாணவர் ராஜேஷ்வரன் மற்றும் சிலரும் கீழே விழுந்த கோகுல்ராஜை உடனடியாக மீட்டு, … Read more

செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் – உக்ரைன் எச்சரிக்கை

Ukraine Update In tamil : உக்ரைன் மீதான் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு மாகாணங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதனால் உகரைனில் இருந்து மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், போரை நிறுத்த வேண்டும் என்று பல தரப்பினரும் ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை வைத்து வருகினறனது. இந்நிலையில், … Read more

கன்னியாகுமரி மீனவர்கள் கைது! ஜி.கே.வாசன் கண்டனம்.!

இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற பொழுது, இந்தோனேசிய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் … Read more

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? தோப்புக்கு நடுவே ரகசிய “ஸ்கேன் மையம்”!

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்துக்கு நடுவே குடிசை வீட்டில் ரகசியமாக இயங்கி வந்த ஸ்கேன் மையம் கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிந்துகொள்வதும் தெரியப்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டியில் வயல்வெளிக்கு நடுவே சிறிய வீடு ஒன்றில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்த பரிசோதனை நடைபெறுவதாக சென்னையிலுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அதிகாரிகள், சுகுமார், வேடியப்பன் என இருவரை … Read more