செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் – உக்ரைன் எச்சரிக்கை

Ukraine Update In tamil : உக்ரைன் மீதான் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு மாகாணங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதனால் உகரைனில் இருந்து மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், போரை நிறுத்த வேண்டும் என்று பல தரப்பினரும் ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை வைத்து வருகினறனது. இந்நிலையில், … Read more

கன்னியாகுமரி மீனவர்கள் கைது! ஜி.கே.வாசன் கண்டனம்.!

இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற பொழுது, இந்தோனேசிய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் … Read more

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? தோப்புக்கு நடுவே ரகசிய “ஸ்கேன் மையம்”!

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்துக்கு நடுவே குடிசை வீட்டில் ரகசியமாக இயங்கி வந்த ஸ்கேன் மையம் கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிந்துகொள்வதும் தெரியப்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டியில் வயல்வெளிக்கு நடுவே சிறிய வீடு ஒன்றில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்த பரிசோதனை நடைபெறுவதாக சென்னையிலுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அதிகாரிகள், சுகுமார், வேடியப்பன் என இருவரை … Read more

பேரறிவாளனுக்கு ஜாமீன்: முழுமையான விடுதலைக்கு முன்னோட்டம் – திருமாவளவன்

சென்னை: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது அவரது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நீண்ட காலமாக இந்தத் தீர்மானத்தின்மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கிறார் என்பதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது, இது எம்.டி.எம்.ஏ … Read more

“ராஜினாமா செய்யாவிட்டால் இப்படி செய்துவிடுவோம்” – பெரியகுளத்தில் விசிகவிடம் திமுக உறுதி

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து திமுகவை சேர்ந்த பெரியகுளம் நகராட்சி துணைத் தலைவரை நீக்கிவிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகர்மன்ற உறுப்பினரை துணைத்தலைவர் ஆக்குவோம் என திமுக பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் நகர்மன்ற துணைத்தலைவர் பதவி திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சியின் அறிவிப்பை மீறி துணைத்தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 26வது வார்டில் வெற்றி பெற்ற ராஜாமுகமது தேர்வு செய்யப்பட்டார்.  இந்த விவகாரம் சர்ச்சையான … Read more

உலகின் மிகச் சிறந்த அரசியல்வாதி மு.க.ஸ்டாலின்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திடீர் பாராட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின், உலகின் மிகச்சிறந்த அரசியல்வாதியாக திகழ்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவகேஎஸ் இளங்கோவன் பாராட்டு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் தற்போது முக்கயத்துவம் பெற்றுள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் ஒருவராக அறியப்படும் இவர் தற்போது பாராட்டு தெரிவித்துள்ளது திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலத்தில் டீ கடை திறப்பு விழாவில் பங்கேற்ற .ஈ,வி,கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம் … Read more

ஜாலியாக இருக்க.. தாலியை கட்டி.. அனுபவித்துவிட்டு மாயமான நாடக காதலன்.! பொடிவைத்து பிடித்த போலிசார்.!

கோவை மாவட்டத்தில் பிரபாகரன் என்ற நபர் சில மாதங்களுக்கு முன் ஆந்திராவிற்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கு தங்கி வேலை பார்த்த பொழுது அவருக்கு ஒரு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது அவரிடம் காதலிப்பதாக தெரிவித்து நான்கு மாதங்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். திடீரென்று அங்கு இருந்து பிரபாகரன் மாயமாகியுள்ளார். தனது கணவரை காணாமல் பெண் தேடி அலைந்து பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் … Read more

குடும்பப் பிரச்சனையில் தந்தையின் கடைக்குத் தீ வைத்த மகன் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குடும்பப் பிரச்சனையில் தந்தையின் கடைக்குத் தீ வைத்த மகனை போலீசார் கைது செய்தனர். தாமரைப்புலம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். மாரியப்பன் அதே பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மாரியப்பனின் முதல் தாரத்து மகன் லட்சுமணனுக்கும் மாரியப்பனுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை எழும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு தந்தையிடம் லட்சுமணன் பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அவர் பணம் … Read more

தமிழகத்தில் இன்று 147 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 47 பேர்: 387 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,469. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,545. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 47 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. … Read more

2 ஆண்டுகள் களையிழந்த கொண்டாட்டம்.. மதுரை சித்திரை திருவிழாவை விமரிசையாக நடத்த திட்டம்

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் பங்கேற்று விமர்சையாக நடைபெறவுள்ளது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடியேற்றம், திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமலும், மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு உள் விழாவாகவும், தேரோட்டம் நடைபெறாமலும் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் நடைபெற்ற சித்திரை … Read more