குடும்பப் பிரச்சனையில் தந்தையின் கடைக்குத் தீ வைத்த மகன் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குடும்பப் பிரச்சனையில் தந்தையின் கடைக்குத் தீ வைத்த மகனை போலீசார் கைது செய்தனர். தாமரைப்புலம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். மாரியப்பன் அதே பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மாரியப்பனின் முதல் தாரத்து மகன் லட்சுமணனுக்கும் மாரியப்பனுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை எழும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு தந்தையிடம் லட்சுமணன் பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அவர் பணம் … Read more

தமிழகத்தில் இன்று 147 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 47 பேர்: 387 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,469. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,545. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 47 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. … Read more

2 ஆண்டுகள் களையிழந்த கொண்டாட்டம்.. மதுரை சித்திரை திருவிழாவை விமரிசையாக நடத்த திட்டம்

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் பங்கேற்று விமர்சையாக நடைபெறவுள்ளது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடியேற்றம், திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமலும், மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு உள் விழாவாகவும், தேரோட்டம் நடைபெறாமலும் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் நடைபெற்ற சித்திரை … Read more

Russia-Ukraine crisis Live: உக்ரைன் அரசை கவிழ்க்க நினைக்கவில்லை : பேச்சுவார்த்தையை தான் விரும்புகிறோம் – ரஷ்யா அரசு

Go to Live Updates ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. விற்பனையை நிறுத்திய பிரபல நிறுவனங்கள் மெக்டோனல்டு, ஸ்டார்பக்ஸ், கொக்கக் கோலா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திவிட்டன. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சுற்றுலா அமைப்பு உக்ரைன் மீது ரஷ்யா … Read more

மதுரை சித்திரைத் திருவிழா.. பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதித்திருந்தது. அதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்களின்றி நடைபெற்று. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. Source … Read more

மது போதையில் பெண்ணைத் தாக்கி தட்டிக் கேட்ட பொதுமக்களையும் சரமாரியாகத் தாக்கிய தலைமைக் காவலர்

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் சாதாரண உடையில் இருக்கும் தலைமைக் காவலர் ஒருவர் மது போதையில் பொதுமக்களைத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கருங்கல்பாளையம் காவல் நிலைய முதல் நிலை காவலரான பாரதி என்பவர், இரவு சாதாரண உடையில் கடைத்தெருவில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் காவலர் பாரதி, “என் கண் முன்பே சண்டை போட்டுக் கொள்கிறீர்களா” என்று சிறுவன் ஒருவனின் சட்டையைப் பிடித்து மிரட்டினார் என்றும் … Read more

மின் கட்டணம் பாக்கி: நாகையில் மத்திய அரசு நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிப்பு

நாகப்பட்டினம்: மின் கட்டணம் பாக்கித் தொகை செலுத்தாத காரணத்தால், நாகையில் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் கிளை அலுவலகம், நாகூர் பண்டகசாலை தெருவில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஆலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், சிபிசிஎல் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக மின் கட்டணம் … Read more

தருமபுரியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டக்கல் கண்டுபிடிப்பு

பென்னாகரம் அருகே நரசிபுரம் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிபுரத்தில் உள்ள கரடு பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால வட்டக்கல் எனப்படும் (கல் வட்டங்கள்) ஈமச் சின்னங்களை புதுபட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள வட்டக்கல் மற்றும் ஈமச் சின்னங்களை முழுமையாக ஆய்வு செய்யும்பொழுது அந்தகால மனிதர்களின் வாழ்க்கைமுறை குறித்த வரலாற்றுச் சுவடுகளைக் கண்டறிய … Read more

எடப்பாடி பழனிச்சாமி தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறுவதா? அ.தி.மு.க எச்சரிக்கை

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ‘சசிகலாவை இணைக்க நெருக்கடி, தனிக்கட்சி தொடக்குகிறாரா பழனிசாமி’ என்று செய்தி வெளியிட்ட தமிழ் இணைய ஊடகத்துக்கு அதிமுக எச்சரிக்கை தெரிவித்துள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி சார்பில், வழக்கறிஞர் ராஜகோபால், பொய்யான செய்திக்காக மன்னிப்பு கோர வேண்டும் என ஊடக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்ததில் இருந்தே, … Read more

உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவு || மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மிக நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் பிணையில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பேரறிவாளனின் சட்டப்பூர்வ விடுதலை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் 2014-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் … Read more