தமிழக செய்திகள்
Russia-Ukraine crisis Live: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள்: பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை
Go to Live Updates ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. விற்பனையை நிறுத்திய பிரபல நிறுவனங்கள் மெக்டோனல்டு, ஸ்டார்பக்ஸ், கொக்கக் கோலா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திவிட்டன. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சுற்றுலா அமைப்பு உக்ரைன் மீது ரஷ்யா … Read more
டாஸ்மாக் வருமானம் தான்., திராவிட மாடல் வளர்ச்சியா? தமிழக முதல்வரை விமர்சித்த அண்ணமாலை.!
தமிழக அரசிடம் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லாமல் தான், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி உள்ளதாக, பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது, “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதுவரை மேகதாது அணை விவகாரம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக, கர்நாடக காங்கிரஸ் … Read more
மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு… வெளியான சிசிடிவி காட்சிகள்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னாம்பேட்டையைச் சேர்ந்த இத்ரீஸ் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இரவில் வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link
இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2,631 மாற்றுத் திறனாளிகள் பட்டம் பெற்று சாதனை: 3,257 பேர் சிறப்பு பிஎட் பட்டம் பெற்றுள்ளனர்
சென்னை: இந்தியாவிலேயே அதிகமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2,631 மாற்றுத் திறனாளிகள் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 81 பட்டப் படிப்புகள், 21 திறன் மேம்பாட்டுப் படிப்புகள் ஆகிய 130 கல்விசார் பாடவகைப் பிரிவுகளைத் தொலைதூரக் கல்விஅடிப்படையில் வழங்கி வருகிறது. இதில்50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். அதன்படி, பல்கலைக்கழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பல்வேறு படிப்பு களைப் படித்து வருகின்றனர். இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாற்றுத் திறனாளி … Read more
திருவண்ணாமலை: மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி – 2 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற இருவர் உயிரிழந்தனர். சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற ஏழுமலை என்பவரும், சரண்ராஜை காப்பாற்ற வந்த ரேணு கோபால் என்பவரும் உயிரிழந்தனர். சரண்ராஜ் மீதான முன்விரோதத்தால் அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொல்ல முயன்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
இன்னும் 30 ஆண்டுகளுக்கு ஸ்டாலினே முதல்வர்: சேகர்பாபு ஏற்பாடு செய்த விழாவில் நடிகை ரோஜா பேச்சு
Actress And MLA Roja Speech About CM Stalin : தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புரசேவாகக்த்தில் நடைபெற்ற புகழ் அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திரா எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் சினிமாலி் 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள அவர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துகொண்டு தற்போது ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து ஆந்திராவில் அரசியல் பிரவேசம் மேற்கொண்ட … Read more
பராமரிப்பு பணி! கும்மிடிப்பூண்டி பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்.!
துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி பஜார், பைபாஸ் சாலை, பிரித்வி நகர், கோட்டக்கரை, முனுசாமி நகர், பூபாலன் நகர், மங்காபவரம், … Read more
செல்போன் கடையில் பழுது பார்த்தபோது திடீரென வெடித்துச் சிதறிய பேட்டரி… தெறித்து ஓடிய வாடிக்கையாளர்கள்
கேரளா மாநிலம் கோட்டயத்தில் செல்போன் கடையில் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென பேட்டரி வெடித்து சிதறியதால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கோழிச்சந்தை பகுதியில் இயங்கிவரும் செல்போன் கடைக்கு வந்த வெளிமாநில தொழிலாளி ஒருவர் தனது போனை கொடுத்து பழுது பார்க்க கூறியுள்ளார். இந்நிலையில், பழுது பார்த்து கொண்டிருந்தபோது அதிக சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியது. சிசிடிவி காட்சியில் மற்றொரு தொழிலாளியின் கையில் இருந்த பொருளிலிருந்து தீ பற்றியததாக கூறப்படுகிறது . Source link