வளர்மதிக்கு கேக் ஊட்டிய எடப்பாடி.. மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ வைரல்.!

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மகளிர் தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருவரும் இணைந்து கேக் வெட்டி அதிமுக பெண் நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டி விட்டனர். தற்போது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் … Read more

மேகதாது திட்டத்தை தடுக்க சட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் – அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்றவாறு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரைத் தடுக்கும் முயற்சி என்றும், இது தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு அதன் நிதி நிலை அறிக்கையில், மேகதாது அணை திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது … Read more

'உங்கள் பணியைப் பார்த்து தான் எனக்கு இந்த வேகம்' – ஷைலஜா டீச்சரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில், திமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், திமுக மக்களவை எம்பி கனிமொழியுடன், கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதேவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் முக ஸ்டாலின், சைலஜா டீச்சரை வெகுவாக பாராட்டி பேசினார். அதில், “மகளிர் சகோதரிகள் முன்மாதிரியாக கொள்ள வேண்டிய ஷைலஜா டீச்சர் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த ஷைலஜா டீச்சர், பொதுவுடைமைக் கருத்தியலால் … Read more

"புனித வெள்ளியன்று டாஸ்மாக்கை மூட வேண்டும்" – தமிழக முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தில் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிடும்படி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், புனித வெள்ளி வரும் ஏப்ரல் மாதம்15 ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளதாகவும், இந்நாளில் கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பிருந்தும், ரத்த தானம் செய்தும் இயேசு கிறிஸ்துவுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கூறியுள்ளார். எனவே, இயேசுவின் மகத்தான தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட … Read more

திமுக ஒதுக்கியது 16; கிடைத்தது 8: பொறுமை காக்க வி.சி.க முடிவு

திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்ட 16 பதவிகளில் திமுகவினரே போட்டியிட்டு கைப்பற்றியது போக மீதி 8 பதவிகள் மட்டுமே விசிகவுக்கு கிடைத்துள்ளது. இருப்பினும், விசிக பொறுமை காக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலித் அரசியல் கட்சியாக அறியப்படும் திருமாவளவன் தலைமையிலான விசிக கடந்த 2019 ஆண்டு மக்களவைத் தேர்தல் முதலே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு அளிக்கப்பட்ட 2 மக்களவைத்தொகுதிகளில் அக்கட்சியின் தலைவர் … Read more

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார் மேயர்.!

மகளிர் தினத்தை முன்னிட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பரிசு மற்றும் கேடையங்களை வழங்கினார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கலையரங்கில் மகளிர் தின விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.  … Read more

எஸ்கார்ட் வாகனங்களுடன் அழைத்துவரப்பட்ட முதல்நிலை பெண் காவலர்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை செம்மஞ்சேரியயைச் சேர்ந்த சரிதா என்ற முதல்நிலை காவலர், அவரது வீட்டில் இருந்து காவல் நிலையம் வரை காவல்துறை எஸ்கார்ட் வாகனங்கள் புடைசூழ அழைத்துவரப்பட்டு கெளரவிக்கப்பட்டார். செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சரிதா, தன் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று வீட்டில் இருந்து கிளம்பிய சரிதாவின் இரு சக்கர வாகனத்தின் முன்னும் பின்னும் 2 எஸ்கார்ட் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பியபடி காவல் நிலையம் … Read more

முதல் வேளாண் பட்ஜெட்டின் 26 அறிவிப்புகளை செயல்படுத்தவில்லையா? – பாமகவுக்கு தமிழக அரசு மறுப்பு

சென்னை: ’2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மொத்த அறிவிப்புகளில் 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என்ற பாமகவின் வேளாண் நிழல் நிதி அறிக்கைக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்புகளின் தற்போதைய நிலையையும் அவர் விவரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என … Read more

சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் உள்ளிட்ட 29 பேருக்கு 'நாரி சக்தி' விருது

சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா ரங்கசாமி உள்ளிட்ட 29 பேருக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார். நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களில் சிறப்புமிக்க சேவைகளை செய்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக நாரி சக்தி விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில், நீலகிரியைச் சேர்ந்த தோடா சமூகத்தைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து, கைப்பின்னல் … Read more

கால் நூற்றாண்டு மாவட்டச் செயலாளர்… ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தடுமாறிய பரிதாபம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தடுமாறிய நிகழ்ச்சிதான் டாக் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஸ்வீப் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி திமுகவினருக்கும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியான செய்தியான செய்திதான் என்றாலும், மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் … Read more