சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் உள்ளிட்ட 29 பேருக்கு 'நாரி சக்தி' விருது

சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா ரங்கசாமி உள்ளிட்ட 29 பேருக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார். நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களில் சிறப்புமிக்க சேவைகளை செய்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக நாரி சக்தி விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில், நீலகிரியைச் சேர்ந்த தோடா சமூகத்தைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து, கைப்பின்னல் … Read more

கால் நூற்றாண்டு மாவட்டச் செயலாளர்… ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தடுமாறிய பரிதாபம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தடுமாறிய நிகழ்ச்சிதான் டாக் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஸ்வீப் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி திமுகவினருக்கும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியான செய்தியான செய்திதான் என்றாலும், மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் … Read more

#BREAKING : குடும்ப தலைவியின் பெயரில் வீடு – தமிழக முதல்வர் அறிவிப்பு.!

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆண்களை விட பெண்களே அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர். அரசு … Read more

இதய நோய் பாதிப்பால் உயிரிழந்த காதலி ; மனமுடைந்த காதலன் தற்கொலை

கள்ளக்குறிச்சியில், முகநூலில் அறிமுகமான இதய நோய் பாதித்த காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல், காதலன் எலி மருந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகைப்பட கலைஞரான மணிகண்டனுக்கு, முகநூலில் பூமிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாற, பூமிகா இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்தும் மணிகண்டன் அவரை காதலித்து வந்ததாகவும் ஒருமுறை கூட பூமிகாவை நேரில் சந்தித்ததில்லை என்றும் கூறப்படுகிறது. செல்போன் … Read more

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு மார்ச் 21-ல் ஆஜராக ஓபிஎஸ், இளவரசிக்கு சம்மன்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் மார்ச் 21-ல் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. சசிகலா தரப்பில் இரண்டாவது நாளாக நடந்த குறுக்கு விசாரணையின்போது, அப்போலோ மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். … Read more

“எங்களுக்கு வந்த இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது" – கோகுல்ராஜின் தாயார்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கும் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 8 பேருக்கும் ஆயுள் … Read more

கோகுல் ராஜ் ஆணவக் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை சாகும் வரை சிறை

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல்லில் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அவர், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்ததன் காரணமாக, சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர், திட்டமிட்டு ஆணவக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதில் 2 பேர் இறந்த நிலையில், ஏனைய … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத் துறை.!

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில், பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு தமிழக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் மார்ச் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை … Read more

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 21-ந் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இன்றைய விசாரணையில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். ஜெயலலிதா இறப்பதற்கு முன் அவருக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு கார்டியாடிக் அரெஸ்ட் ஏற்பட்டதாகவும், உயிர்காக்கும் சிகிச்சைகள் … Read more