யார் நலனில் அக்கறை கொள்கிறது ஒன்றிய அரசு? – மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கேள்வி

35 சதவிகித பங்குகள் வைத்திருந்தாலும் உரிமையாளராக முடியாத ஒன்றிய அரசு, சிறு தொழில்களை காக்க நிதியில்லை என்பது நியாயமா? யார் நலனில் அக்கறை கொள்கிறது அரசு? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சு. வெங்கடேசன் கூறியபோது, ’’தனியார் தொலைதொடர்புத் துறை நிறுவனங்கள் வைத்திருக்கிற பாக்கி, அதற்கு தரப்பட்டுள்ள தவணை காலம், பங்குகளாக மாற்றிக்கொள்ள அரசு கொடுத்த வாய்ப்பு குறித்து அவையில் கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொடர்பு இணை … Read more

பாஜகவில் இணைந்த தி கிரேட் காளி; கட்சியின் தேசிய கொள்கையால் ஈர்க்கப்பட்டதாக பேச்சு

Dalip Singh Rana, known as The Great Khali, joins BJP: தி கிரேட் காளி என்று அழைக்கப்படும் மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா, டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை அக்கட்சியில் இணைந்தார். ராஜ்யசபா எம்பி அருண் சிங், இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மக்களவை எம்பி சுனிதா துக்கல் முன்னிலையில் அவர் பாஜக கட்சியில் இணைந்தார். “பாஜகவில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்… பிரதமர் நரேந்திர மோடியின் தேசத்திற்கான … Read more

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமணம்.!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக, நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நியமணம் செய்யப்பட்டார். அவரை முழு நேர தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற கொலீஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமணம் … Read more

சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை வண்டியில் ஏற்றி கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை <!– சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை வண்டியில் ஏற்றி கடத்த… –>

திருக்கோவிலூரில் சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை சில மர்ம நபர்கள் வண்டியில் ஏற்றி கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இம்மாதம் ஒன்றாம் தேதி இரவு சாலையில் படுத்து கிடந்த 8 பசு மாடுகள் மறுநாள் காலை மாயமாகின. மாட்டின் உரிமையாளர்களுள் ஒருவர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் சரக்கு வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் மாடுகளின் கழுத்தில் கயிறு கட்டி, … Read more

பிப்ரவரி 10: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,28,068 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த போலீசார், இது தவறான புகார் என வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை நாமக்கல் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த மனுவை … Read more

வேற லெவல் ‘மனிதர்’ சிவா… பாட்டு எழுத கிடைக்கும் ஊதியத்தை என்ன செய்கிறார் தெரியுமா?

Actor Sivakarthikeyan helps Na Muthukumar family: பாடல் எழுதி சம்பாதிக்கும் பணத்தினை நடிகர் சிவகார்த்திகேயன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் குடும்பத்திற்கு வழங்கி வருதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நா,முத்துக்குமார். இவரின் பாடல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமை பெற்றவர் நா.முத்துக்குமார். மேலும் இரு முறை தேசிய விருதும் … Read more

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கண்டனம்.!

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற முந்தைய காலங்களில் திமுக எப்படி நடந்து கொண்டதோ அந்த நிலையை மாற்றி கொள்ளாமல் தற்போதும் அதைப் போலவே … Read more