கோகுல்ராஜ் கொலை வழக்கு – முதலாவது குற்றவாளி யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனைகள் விதிப்பு..!

கோகுல்ராஜ் கொலை வழக்கு – தண்டனை அறிவிப்பு பொறியியல் மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விபரங்கள் அறிவிப்பு யுவராஜ் உள்பட குற்றவாளிகள் 10 பேருக்கு தண்டனை அறிவிப்பு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் தண்டனை விபரத்தை அறிவித்தார் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை முதலாவது குற்றவாளி யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனைகள் விதிப்பு யுவராஜின் ஓட்டுனர் அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதிப்பு குமார், … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ், கார் ஓட்டுநருக்கு  3 ஆயுள்; 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு சாகும் வரை சிறை 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் தண்டனை விவரங்களை மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று காலை 11 மணிக்கு அறிவிப்பதாக இருந்தது. … Read more

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, தணிக்கை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ’கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தணிக்கை செய்ய மண்டல மற்றும் மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நகர கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு என தனித்தனியாக சிறப்பு … Read more

வாழ்வா? வருங்காலமா? சோதிக்கும் பெத்தேல் நகர் குடியிருப்பு விவகாரம்…

Bethel Nagar Eviction : சென்னை பூர்வகுடி மக்கள், மீனவர்கள், ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர்கள், கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரர்களை கொண்டு, பலமொழி பேசும் மாநகரமாக இன்று திகழ்கிறது. சிங்காரச் சென்னை 2.0 என்று பேசினாலும், மழை பெய்தால் முட்டி வரை சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதையும், மூன்று நாட்கள் விடாது கொட்டித் தீர்த்தால் இயல்பு நிலை முடங்கி போவதையும் நாம் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது காண தவறுவதில்லை. ஆக்கிரமிப்புகள், பெரிய பெரிய மின் … Read more

நாடக காதலனிடம் சிக்கிய காயத்திரி., கிருஸ்துவ தேவாலயத்தில் தாலிகட்டி., ஹோட்டல் அறையில் முடிந்த சம்பவம்.!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்ல் படுக்கையறையில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அந்த இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஜோஸ்கோ நகை கடையில் பணிபுரியும் பிரவீன் என்பவரின் பெயரில் அந்த ஹோட்டல் அறை முன் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், போலீசார் விசாரணை செய்ததில் ஜோஸ்கோ நகைக்கடையில் நடைபெற்ற நாடக காதல் + கள்ளகாதல் கொலை விவகாரம் அம்பலமாகியுள்ளது. திருவனந்தபுரம் ஜோஸ்கோ நகைக்கடையின் வரவேற்பாளர் ஆக … Read more

தனியார் பேருந்து நடத்துநரின் பையில் இருந்து கூட்ட நெரிசலில் இடித்தவாறு ரூ.2000ஐ லாவகமாக திருடிய பெண் – 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தனியார் பேருந்து நடத்துநரின் பணப்பையில் இருந்து 2  ஆயிரம் ரூபாயைத் திருடிக் கொண்டு தப்பிக்க முயன்ற பெண் உட்பட 4 பேரை சக பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முத்தனேந்தல் வந்தபோது, 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் நடத்துநரை இடித்துத் தள்ளியவாறு, அவசர அவசரமாக இறங்கினர். அப்போது அந்த 4 பேரில் ஒரு பெண், … Read more

ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் … Read more

சிறையில் உள்ள 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 11 மீனவர்களையும், 3 விசைப்படகையும் கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிப்ரவரி 22-ம்தேதி வரை … Read more