2 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி <!– 2 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோ… –>

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  கோவையிலிருந்து மணப்பாறை நோக்கி குமரேசன், அவரது மனைவி ஆனந்தி மற்றும் அவர்களது 3 வயது பெண் குழந்தை ஒரு வாகனத்திலும், அவர்களது உறவினர்களான முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் மற்றொரு இருசக்கர … Read more

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: பிற்பகலில் தண்டனை அறிவிப்பு

மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படவுள்ளது. கோகுல்ராஜ் கொலை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். வேறொரு சாதி பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது … Read more

தூத்துக்குடி: திருமணமான ஐந்தே மாதத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்ததாக அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் பாலதண்டாயுத நகரைச் சேர்ந்தவர் சண்முகம் – மாரியம்மாள் தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமான நாளிலிருந்து அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக மாரிச்செல்வியை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர் … Read more

இந்திய ராணுவத்தில் சேர முடியாத ஏக்கம்; உக்ரைனுக்காக ஆயுதம் ஏந்திய தமிழக இளைஞர்

Tamilnadu youth joins Ukraine army to fight Russia invasion: தமிழகத்தைச் சேர்ந்த 21 வயதான விண்வெளி பொறியியல் மாணவர், உக்ரைனுக்காக ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருவதாக மத்திய மற்றும் மாநில அரசுளின் உளவுத்துறை அறிக்கை கூறுகிறது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சைனிகேஷ் ரவிச்சந்திரன் என்ற மாணவர், 2018 இல் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இந்திய ராணுவத்தில் சேர முயன்றார், ஆனால் உயரம் காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. … Read more

பராமரிப்பு பணி! எடப்பாடி நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்.!

துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட, எடப்பாடி கோட்ட துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும், இதன் காரணமாக, எடப்பாடி நகரம், ஆவணியூர், தாதாபுரம், வேம்பனேரி, வி.என்.பாளையம், குரும்பப்பட்டி, மலயனூர், வேலம்மாவலசு, அம்மன் காட்டூர், தங்கயூர், எருமைப்பட்டி … Read more

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: நம் நாட்டில் ஆன்மிகம், அறிவுசார், சமூகம், அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்களின் தலைமைத்துவம் இருந்துள்ளது நாம் அனைவரும் பெருமைப்படும் விஷயமாகும். அவ்வையார், வீர மங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் … Read more

பல்லடம்: அதிகாலையில் நடந்த கோர சாலை விபத்து – குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

பல்லடம் அருகே சரக்கு ஆட்டோ இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவையைச் சேர்ந்த குமரேசன் அவரது மனைவி ஆனந்தி ஆகியோரும், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தையுடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை புத்தரச்சல் அருகே வந்தபோது, … Read more

Russia-Ukraine crisis Live: உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு

Go to Live Updates உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போரை நிறுத்துவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை சந்தித்த முதல்வர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களை மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். நெல்லை பாளையங்கோட்டையில் மாணவ-மாணவிகளை அவர் சந்தித்து பேசினார். அப்போது மாணவர்கள் முதலமைச்சருக்கு … Read more