”தலைமைக்கு அதிமுகவினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்
மதுரை: “அதிமுக, தலைமைக்கு கட்சியினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் “எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட அதிமுக பல்வேறு சவால்களைத் தாண்டி செயல்படுகிறது. திமுகவின் அடக்குமுறையைத் தாண்டி அதிமுக செயல்படுகிறது. அதிமுக மட்டுமே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுகவின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் முயற்சி நடைபெறுகிறது. இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் அதிமுகவின் பாதுகாப்பு கவசங்களாக திகழ்கிறார்கள். 50 ஆண்டுகளாக அரசியல் … Read more