பெண்கள் இல்லாமல் இந்தப் பூவுலகம் இயங்காது… டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து..!

அம்மா மக்கள் முன்னின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது, தாய்மையின் பெரும் உருவமான பெண்ணினத்தைப் போற்றி கொண்டாடுகிற உலக மகளிர் தினத்தில் மாதர்குலத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  உலகிற்கே வழிகாட்டும் வகையில்தமிழ்நாட்டு பெண்களின் உயர்வுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி இடங்களை பெண்களுக்காக ஒதுக்கி தந்ததால், இன்று ஆயிரக்கணக்கில் பெண் பிரதிநிதிகள் பதவிகளை அலங்கரித்து … Read more

தமிழகத்தில் தயாரித்த கனரக வாகனங்களுக்கு வெளிமாநிலங்களில் தற்காலிக வாகன பதிவு : அரசுக்கு ரூ.52 கோடி இழப்பு <!– தமிழகத்தில் தயாரித்த கனரக வாகனங்களுக்கு வெளிமாநிலங்களில் … –>

தமிழகத்தில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்கள், வெளிமாநிலங்களில் தற்காலிக வாகன பதிவு மேற்கொள்வதால் 52கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள போக்குவரத்து துறை ஆணையர், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களை, வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று தற்காலிக பதிவு சான்று பெற்றுவிட்டு, பின்னர் தமிழகத்தில் நிரந்தர வாகனப் பதிவு மேற்கொள்வதாகவும், இதுபோன்று ஆண்டுக்கு சுமார் 50ஆயிரம் வாகனங்கள் வெளிமாநிலங்களில் தற்காலிக பதிவு மேற்கொள்வதால் … Read more

''அய்யோ சாமி'' – சசிகலா இணைப்பு குறித்த கேள்விக்கு நழுவிய ஓபிஎஸ்

மதுரை: ‘‘முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு இஷ்டம் போல் செயல்பட முடியாது’’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தார். அதிமுக தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதும், அதன் நகலைகூட்டத்தில் இருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதே கட்சித் தொண்டர்கள் விருப்பமாக உள்ளது என்றும், அதற்கான … Read more

'அய்யோ சாமி விட்ருங்க' – சசிகலா இணைப்பு குறித்த கேள்வியை தவிர்த்த ஓபிஎஸ்!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு ‘அய்யோ சாமி வேண்டாம்’ என ஒபிஎஸ் பதிலளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு அய்யோ சாமி வேண்டாம் என பதிலளித்துள்ளார். மேலும், “முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசின் அனுமதியை பெற்றுதான் கட்ட முடியும், கேரள அரசு தன்னிச்சையாக  முடிவெடுக்க முடியாது. நாளை மகளிர் தினத்திற்காக சென்னை செல்கிறேன், பெண்களை தாயாக … Read more

உ.பி-யில் குறைந்த மெஜாரிட்டியில் பா. ஜ.க; பஞ்சாப்-ல் ஆம் ஆத்மி ஆட்சி: Exit Poll ரிசல்ட்

Elections Exit Poll Results 2022: BJP to retain UP with reduced majority; AAP to unseat Congress in Punjab: உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உத்தரப் பிரதேசத்தில் குறைந்த பெரும்பான்மையுடன் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தெளிவான வெற்றியைக் கணித்துள்ளன. இந்த முறை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை … Read more

பட்டாசு ஆலையில் தீவிபத்து.. தொழிலாளி பரிதாப பலி.. !

பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், மேலஓடம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணீயின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலை இடிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை சிகிச்சைகாக மருத்துவமனையில் … Read more

பாசமாக பழகுவது போல் நடித்து தொழிலதிபரை ஏமாற்றி கடத்திய பெண்ணுக்கு வலைவீச்சு <!– பாசமாக பழகுவது போல் நடித்து தொழிலதிபரை ஏமாற்றி கடத்திய பெ… –>

திருச்சியில் பாசமாக பழகுவது போல் நடித்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ஏமாற்றிய பெண் ஒருவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் கேட்டு அவரை கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவளர்ச்சோலையைச் சேர்ந்த ஜோசப் வல்லவராஜ் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், நண்பருடைய தோப்பையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த அவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த ஏற்கனவே திருமணமான சுந்தரி என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜோசப் … Read more

'ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நல பாதிப்புகள்' – மருத்துவர்கள் பகிர்ந்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்

சென்னை: ”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம், வெர்டிகோ, தலைசுற்றல் பிரச்சினைகள் இருந்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தின் குறுக்கு விசாரணையில் பங்கேற்ற அப்போலோ மருத்துவர்கள் கூறினர்” என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இன்று நடந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகியிருந்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் … Read more

உளுந்தூர்பேட்டை: மாசி மாத தேரோட்ட திருவிழாவில் சாய்ந்த தேர்… பக்தர்கள் அதிர்ச்சி

உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற மாசி மாத தேரோட்ட திருவிழாவின்போது தேர் சாய்ந்து கவிழ்ந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் அருள்மிகு பெரியநாயகி என்கிற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவை தொடர்ந்து மாசி தேரோட்டமும் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் இரண்டாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இன்று … Read more

10 வரை படிப்பு, வாடகை வீடு… ஆட்டோ டிரைவரை தேடிவந்த மேயர் பதவி!.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக 42 வயதான கே சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் பொறுப்பேற்றுள்ளார். மக்கள் மத்தியில்’ தான் இன்னும் ஒருவனாக இருக்கிறேன் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, சரவணன் வெள்ளிக்கிழமை பதவியேற்பு விழாவிற்கு ஆட்டோவில் வந்தார். ஆளும் தி.மு.க., மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், காங்கிரசுக்கு ஒரு மேயர் பதவியை ஒதுக்கி, அக்கட்சியின் வேட்பாளர்களை பரிந்துரை செய்தது. பல மூத்த தலைவர்களில் ஒருவருக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், காங்கிரஸ் … Read more