தமிழகத்தில் இன்று 158 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 56 பேர்: 512 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,171. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,10,740. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 85,20,519 பேர் வந்துள்ளனர். சென்னையில் 56 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

நெல்லையில் சந்திப்பு… உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ- மாணவிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்!

CM Stalin meets Ukraine return medical students: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் சந்தித்து பேசினார். உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியா மாணவர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. இதனிடையே தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசோடு, … Read more

மகளிர் தினத்தில் பாலிய சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை நிலைபெறச்செய்யவும் உறுதியேற்போம் – சீமான்..!

மகளிர் தினத்தில் பாலிய சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை நிலைபெறச்செய்யவும் உறுதியேற்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று மகளிரைப் போற்றிக் கொண்டாடுகிறார் ஐயா கவிமணி தேசிய விநாயகம். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித்தொழுகிறார் பெரும்பாவலர் சுப்பிரமணியப் … Read more

சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு <!– சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தத… –>

புது டெல்லியில் இருந்து கோயம்புத்தூருக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென தீ பற்றி எரிந்தது. ஆவாரம்பாளையத்தில், சாலையோரம் நின்ற லாரியின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டதால் அதன் முன்புறம் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்துவதற்குள் லாரியின் முன்புறம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கன்டெய்னருக்கு நெருப்பு பரவாததால், மருத்துவ உபகரணங்கள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.     Source link

”தலைமைக்கு அதிமுகவினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

மதுரை: “அதிமுக, தலைமைக்கு கட்சியினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் “எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட அதிமுக பல்வேறு சவால்களைத் தாண்டி செயல்படுகிறது. திமுகவின் அடக்குமுறையைத் தாண்டி அதிமுக செயல்படுகிறது. அதிமுக மட்டுமே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுகவின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் முயற்சி நடைபெறுகிறது. இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் அதிமுகவின் பாதுகாப்பு கவசங்களாக திகழ்கிறார்கள். 50 ஆண்டுகளாக அரசியல் … Read more

மறுக்கும் திமுக நகராட்சி தலைவர்; ‘டெட்லைன்’ கொடுத்த தங்கத்தமிழ்செல்வன்-தேனியில் பரபரப்பு

கட்சி கட்டுப்பாட்டை மீறி தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் ரேணு பிரியா ராஜினாமா செய்ய மாலை 5 மணி வரை கொடுக்கப்பட்ட “டெட் லைன்” 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார். தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 19-வார்டு களையும் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ கட்சி இரண்டு வார்டுகளையும் அமமுக இரண்டு இரண்டு வார்டுகளையும், என அதிமுக 7 வார்டுகளிலும் … Read more

மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம்

Police explanation on Madurai minor girl death case: மதுரையில் 17 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டது பற்றிய ஊகங்கள் வெளிவந்ததை அடுத்து, மதுரை ஊரக எஸ்பி வி பாஸ்கரன் அத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை அல்லது போதைப்பொருள் கொடுக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எஸ்பி பாஸ்கரன் கூறினார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த 17 … Read more

பெண்கள் இல்லாமல் இந்தப் பூவுலகம் இயங்காது… டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து..!

அம்மா மக்கள் முன்னின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது, தாய்மையின் பெரும் உருவமான பெண்ணினத்தைப் போற்றி கொண்டாடுகிற உலக மகளிர் தினத்தில் மாதர்குலத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  உலகிற்கே வழிகாட்டும் வகையில்தமிழ்நாட்டு பெண்களின் உயர்வுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி இடங்களை பெண்களுக்காக ஒதுக்கி தந்ததால், இன்று ஆயிரக்கணக்கில் பெண் பிரதிநிதிகள் பதவிகளை அலங்கரித்து … Read more

தமிழகத்தில் தயாரித்த கனரக வாகனங்களுக்கு வெளிமாநிலங்களில் தற்காலிக வாகன பதிவு : அரசுக்கு ரூ.52 கோடி இழப்பு <!– தமிழகத்தில் தயாரித்த கனரக வாகனங்களுக்கு வெளிமாநிலங்களில் … –>

தமிழகத்தில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்கள், வெளிமாநிலங்களில் தற்காலிக வாகன பதிவு மேற்கொள்வதால் 52கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள போக்குவரத்து துறை ஆணையர், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களை, வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று தற்காலிக பதிவு சான்று பெற்றுவிட்டு, பின்னர் தமிழகத்தில் நிரந்தர வாகனப் பதிவு மேற்கொள்வதாகவும், இதுபோன்று ஆண்டுக்கு சுமார் 50ஆயிரம் வாகனங்கள் வெளிமாநிலங்களில் தற்காலிக பதிவு மேற்கொள்வதால் … Read more