நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போகிறது "இரட்டை இலை” தான் – தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மடல்.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அவர்களின் அந்த கடிதத்தில், “நிழலின் அருமை வெயிலில் தெரிவது போலவும், நேர்மையின் பெருமை நிம்மதியில் அறியப்படுவது போலவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் அருமையும், பெருமையும் விடியா பொழுதாக, முடியா இருளாக விளங்கும் திமுக … Read more

தாய்க்கு காதலன்.. மாணவிக்கு வில்லன்.. கம்பி எண்ணும் மருத்துவன்..! போக்சோவில் தூக்கிய போலீஸ் <!– தாய்க்கு காதலன்.. மாணவிக்கு வில்லன்.. கம்பி எண்ணும் மருத்… –>

காரைக்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணை காதல்வலையில் வீழ்த்திய எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் , காதலியின் மகளான பள்ளிச்சிறுமியிடமும் அத்துமீறியதால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு … Read more

விழுப்புரம்: பேருந்தில் தவறவிட்ட குழந்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு

விழுப்புரம்: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன் தினம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ‌மணக்காணம் அருகே ‌பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 மாத குழந்தையை வைத்திருக்குமாறு கூறியுள்ளார். அப்பெண் குழந்தையை வாங்கிய சிறிது நேரத்தில் குழந்தையை கொடுத்த நபர் பேருந்திலிருந்து இறங்கி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் … Read more

சென்னை மெட்ரோ: போரூர், பூந்தமல்லி மக்கள் பயனடையும் வகையில் டபுள் டெக்கர் லைன்

Chennai Metro : இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நான்கு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் போது காரிடர் 4 மற்றும் 5-ல் ஒரே நேரத்தில், ஒன்றன் மீது ஒன்றாக, இரண்டு ரயில்கள் 5 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், காரம்பாக்கம், போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வடசென்னை அல்லது தென் சென்னைக்கு எளிதாக பயணிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துவங்கியுள்ள … Read more

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும் – மத்திய அரசு.!

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த சட்டங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக -வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்றும், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கு முன்பு அந்த சட்டங்களின் அடிப்படையில், … Read more

கூகுல் பே யில் ரூ 5000.. கார் களவாணியிடம் பேரம்.. காவல் ஆய்வாளர் ஆடியோ..! திருட்டு வழக்கு மோசடி வழக்கான கூத்து <!– கூகுல் பே யில் ரூ 5000.. கார் களவாணியிடம் பேரம்.. காவல் ஆ… –>

கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க மாவட்ட செயலாளாரை கைது செய்யாமல் இருக்க தவணை முறையில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் கூகுல் பே மூலம் பணம் கேட்டுப்பெறும் ஆடியோ வெளியான நிலையில் துணை ஆணையர் கேட்டுக் கொண்டதால் கார் திருடனை கைது செய்யாமல் விட்டதாக பெண் காவல் ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளார். திருட்டு வழக்கு , மோசடி வழக்காக மாற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சென்னை மாதவரத்தை சேர்ந்த பில்டர் ராஜேந்திரன் … Read more

தமிழகத்தில் இன்று 5,104 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: சென்னையில் 839 பேருக்கு பாதிப்பு; 21,027 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 5,104 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,986. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,43,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,72,322 Source link

பிக் பாஸ்; கண்ணீர் விட்டு அழும் ஜூலி… சக போட்டியாளர்கள் கூறியது என்ன?

Bigg Boss Ultimate new promo Julie crying: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கண்ணீர் விட்டு அழும் வகையில் வெளியாகி உள்ள ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று பெயர் பெற்ற விஜய் டிவி, ஹிட் ரியாலிட்டி ஷோக்களை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களாக ஒளிப்பரப்பி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 இப்போது தான் முடிவடைந்தது. ஆனால் பிக் பாஸ் … Read more

#BREAKING : தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு.. இன்றைய நிலவரம்.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

தமிழக மீனவர் சிக்கலைத் தீர்ப்பது குறித்து இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு <!– தமிழக மீனவர் சிக்கலைத் தீர்ப்பது குறித்து இந்திய – இலங்கை… –>

தமிழக மீனவர் சிக்கல் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசும் பேச்சு நடத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற பேச்சில், மீனவர் சிக்கலைத் தீர்க்க இரு நாட்டுக்குழுக்களும் விரைந்து பேச்சு நடத்த ஒப்புக்கொண்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மீட்சிக்குச் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் அங்கீகரித்ததாகவும், இலங்கையின் எரியாற்றல் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளிடையான பிணைப்பை வலுப்படுத்த மக்களிடையான தொடர்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டதாகவும் … Read more