எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி மற்றும் ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கிரிப்டோ கரன்ஸிகளில் ரூ.34 லட்சம் அளவுக்கு முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், சட்டப்பேரவையில் அதிமுக … Read more

“பல்கலை.யில் ஆளுநர் வேந்தராவதை தவிர்க்க மாநில அரசு சட்டமியற்ற வேண்டும்”- பாலகிருஷஷ்ணன்

“பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக நீடிப்பதை தவிர்த்து, கல்வித் துறை அமைச்சரே வேந்தராக நியமிக்க மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றுநாள் மாநில குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமாக உள்ளது. ஆளுநர்களுக்கும் … Read more

Tamil News Today Live: இன்று முதல் 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி!

Go to Live Updates Tamil Nadu News Updates: இந்தியா முழுவதும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சென்னையில் 132வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது. கொரோனா அப்டேட் உலகளவில் … Read more

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது.. காரணம் என்ன.?

செல்போன் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் அதே தெருவில் ஐஸ் கடை நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி பொருளாளர் அனிஷ் (29) என்பவரின் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் பாலாஜிக்கு, அனிஷ் சம்பள பாக்கி தர வேண்டியதாக கூறப்படுகிறது. அதற்காக … Read more

கோர்பவாக்ஸ் தடுப்பூசி போடும் திட்டம் இன்று துவக்கம்.!

தமிழகத்தில் 12வயது முதல் 14வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, கோர்பவாக்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று துவங்குகிறது. ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோர்பவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது மட்டுமின்றி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் வெளிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு 21 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியின் ஒரு வயலில் 20 நபர்களுக்கு செலுத்தும் வகையில் … Read more

கடலோர மாவட்டங்களில் 18, 19-ம் தேதிகளில் மழை வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 18, 19-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 17-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு … Read more

அ.தி.மு.க-வில் இதுவரை நீக்கப்பட்ட 1000 பேர்… பெங்களூரு புகழேந்தி புது திட்டம்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரையும் கட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், அதிமுகவில் இருந்து இதுவரை நீக்கப்பட்ட 1,000 பேர்களை ஒன்றிணைக்க பெங்களூரு புகழேந்தி புது திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் கொண்டுவர வேண்டும், அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் கட்சியில் … Read more

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீ.!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த வண்ணம் உள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில்  25க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதே போன்று வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டுப்பட்டி மற்றும் பள்ளங்கி பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களிலும் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காட்டில் வசிக்கும் விலங்குகள் தீயின் வெம்மை தாளாமல் பிரதான … Read more

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் சாம்சங் கம்ப்ரசர் ஆலை: தமிழகத்தில் முதலீடு செய்ய மற்ற தொழில் நிறுவனங்களுக்கும் அழைப்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் சாம்சங் நிறுவனத்தின் கம்ப்ரசர் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ‘உங்களைப் போன்ற மற்ற தொழில்நிறுவனங்களையும் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைத்து வாருங்கள்’ என்று இந்த நிகழ்ச்சியில் முதல்வர் அழைப்பு விடுத்தார். பெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காற்றழுத்த கருவிகள் (கம்ப்ரசர்) உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் நிறுவுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு – சாம்சங் நிறுவனம் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் … Read more

Rasi Palan 16th March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 16th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 16th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 16ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more