ரேஷன் கடைகளில் 4000 ஊழியர்கள் நியமனம்… அறிவிப்பு எப்போது?

Tamilnadu Ration Employee Update : ரேஷன்கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில்,  மாவட்ட வாரியாக ரேஷன் கடைகளுக்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் இறங்கி வரும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் எடையாளர் என மொத்தம் 25 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றன்றனர். இதனால் பல ஊழியர்கள் இரண்டு அல்லது மூன்று ரேஷன் கடைகளை சேர்த்து கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் ஊழியர்கள் மிகுந்த … Read more

தலைக்கேறிய மதுபோதை… தந்தையை கொன்ற மகன்..!

மது போதையில் தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அவ்வை நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு திருமணமாகி விஜய லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில நாட்களாக அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்துள்ளார். இதனால், அவரது மனைவி சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்த சங்கர் தனது தாய் ராணியுடன் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்ததால்  … Read more

மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் ரத்து.!

மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியான நிலையில், பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்த முடிவுகளை ரத்து செய்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்து, வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு … Read more

புதுச்சேரியில் கடல் அழகை ரசிக்கும் வகையில் ரூ.13 கோடியில் நவீன ஹோட்டல்: இரு மாதங்களில் பணி நிறைவு

புதுச்சேரி: ”சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.13 கோடியில் நட்சத்திர அந்தஸ்துடன் நவீன ஹோட்டல் கட்டுமான பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி கடற்கரையில் பழைய சாராய வடி ஆலை இடத்தில் கடல் அழகை ரசிக்கும் வகையில், அரசின்புதுவை கடற்கரை சாலையின் இறுதியில் அரசின் சாராய வடி ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை வில்லியனுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் கால் நுாற்றாண்டாக இயங்காமல் வந்தது. … Read more

வெகு விமரிசையாக நடைபெறும் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மற்றும் சென்னை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. பங்குனி பெருவிழாவையொட்டி இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது. ஆரூரா, தியாகேசா என விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். இதனால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் … Read more

5 மாநில தோல்வி: சோர்ந்து கிடக்கும் எதிர்க் கட்சிகளை மீண்டும் ஒன்று திரட்டும் ஸ்டாலின்!

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், சோர்ந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் விதமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் களம் அமைக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 5 மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரக்காண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்த … Read more

கேபிள் டிவி, இண்டர்நெட் தட வாடகையை உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.!

கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களின் தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு தடவாடகை வசூலிக்கப்படுகிறது.   மேலும், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சார்பில் தனி கம்பங்கள் அமைத்தும் … Read more

ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்.. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள கங்காதர ஈஸ்வரர் கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு  மூலவருக்கும், அன்னபூரணி அம்மனுக்கும் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் திருத்தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வரப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.  Source link

ஜாமீனில் விடுதலையானார் பேரறிவாளன் | முழு விடுதலை கிட்டும் வரை ஒத்துழைப்புத் தாருங்கள்: அற்புதம்மாள் கோரிக்கை

திருவள்ளூர்: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பேரறிவாளன் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். முழுமையான விடுதலை கிடைக்கும் வரை அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று, அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 9-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பரோல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இன்று புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 18 மற்றும் 19 … Read more