டிடிவி தினகரன் விடுத்த அன்பு வேண்டுகோள்.! தயாராகும் சென்னை அலுவலகம்.!

மார்ச் 8-ல் மகளிர் தின விழா கொண்டாட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார் என்று, அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிவிப்பில், உலகை இயக்குகிற உன்னத சக்தியாக, வற்றாத அன்பின் வடிவமாக, ஆற்றலின் பேருருவமாகத் திகழும் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக மார்ச் 8-ம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த பெருந்தலைவி, ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் புரட்சித்தலைவி … Read more

தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்றவர்கள் கைது <!– தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்… –>

தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்ற 5 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா-ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பஞ்சலிங்கால சோதனை சாவடியில் அதிகாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹைதராபாத்தில் இருந்து வந்த கோயம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது 5 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகள், வெள்ளிக்கட்டிகள் உள்ளிட்டவை இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை எடுத்துச்சென்ற … Read more

'எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் தடுத்தனர்': நாடு திரும்பிய காரைக்கால் மாணவி பேட்டி

காரைக்கால்: ”இந்திய மாணவர்களை வெளியேற விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைளில் உக்ரேனிய வீரர்கள் ஈடுபடுகின்றனர்”: நாடு திரும்பிய காரைக்கால் சேர்ந்த மாணவி தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள், 2 மாணவிகள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அங்கு போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன்- ஜெயலட்சுமி தம்பதியர் மகள் … Read more

கடலூர் திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிமாக நீக்கம்… காரணம் என்ன?

கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்திருக்கும் அறிக்கையில், சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். முன்னதாக ஏற்கெனவே உசிலம்பட்டி நகர்மன்ற தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி … Read more

இவருக்கே இந்த நிலையா? தி.மு.க-வின் செல்லப் பிள்ளை ‘செல்லாப் பிள்ளை’ ஆன கதை

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதன் மூலம் குமரி மாவட்டத்தில் பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து அவரது அரசியல் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். முக்கியமாக மாவட்ட அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான மனோதங்கராஜ் – நாகர்கோவில் நகர செயலாளர் மகேஷ் கூட்டணி, மேயர் பதவியை அடைந்ததுடன் இருவரின் பொது அரசியல் எதிரியான சுரேஷ்ராஜனை மாவட்ட … Read more

சூடு, சுரணை, மானம், சுயமரியாதை இருந்தால் அவரை கேள்வி கேள்., மேயர் விவகாரத்தில் திமுகவினரை வெளுத்து வாங்கிய பெண்ணியவாதி.!

சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியா ராஜன் செய்தியாளர் சந்திப்பின்போது, ‘அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து பிரபல எழுத்தாளர், சமூக ஆர்வலர், பெண்ணியவாதி சாதிக்கு எதிரான மரியா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது என்னது’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு திமுக உடன்பிறப்புகள் பல்வேறு பதில்களை தெரிவித்து வந்தனர். What is this ra 🙄 https://t.co/ucV7NdVhLQ — Shalin Maria … Read more

இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் – 7 பேர் கைது <!– இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் – 7 பேர் … –>

தூத்துக்குடியில் இருந்து கடல்வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்த முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வெள்ளப்பட்டி கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, விரைந்து சென்ற போலீசார் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கைப்பற்றினர். மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 3 இருசக்கர வாகனம் மற்றும் 9 செல்போன்களையும் பறிமுதல் … Read more

மேகேதாட்டு திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆதரிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது: அன்புமணி ராமதாஸ்

சென்னை:மேகேதாட்டு அணை திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆதரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று உறுதியாக நம்புவதாகவும், அது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். மேகேதாட்டு அணை விவகாரத்தில் நீதிபதியாக செயல்பட … Read more

மதுரையில் சிறுமி கடத்தல்: அதிர்ச்சியூட்டும் கைதானவர்களின் விவரங்கள்

மதுரை மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட வழக்கில், இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாய் உள்பட மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம், மதுரையில் 17வயது சிறுமி காணாமல் போன நிலையில், காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் வைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நாகூர் ஹனிபா என்ற நபர், சிறுமியை காதலிப்பதாகக்கூறி அவரை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. சிறுமியை ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நாகூர் ஹனிபா … Read more