பழநி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்: மார்ச் 18-ம் தேதி தேரோட்டம்

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங் கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலின் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரத் திருவிழா. இத்திருவிழா திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று கொடியேற்றத் துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மண்ட பத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். கொடி மரத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிறக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் திருக்கல்யாணம் மார்ச் 17-ம் … Read more

பத்திரப் பதிவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசுக்கு நடப்பு ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய்: பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தகவல்

தமிழக பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அரசுக்கு ரூ.12,700கோடி நிதி வருவாய் கிடைத்துள்ளது என்று வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குநடப்பு ஆண்டில் அரசுக்கு ரூ.12,700கோடி நிதி வருவாய் கிடைத்துள்ளது. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் அனைத்தும் இணையவழி மூலமாக செலுத்தும் … Read more

நாய்க்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தி மும்பை மருத்துவர்கள் குழு சாதனை

இதய நோயால் பாதிக்கப்பட்ட நாய்க்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தி, மும்பையை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது. மும்பையை சேர்ந்த திவாரி என்பவரது ரோனி என்ற நாய்க்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 30 என்ற அளவில் இருந்துள்ளது. சராசரி அளவு 120 முதல் 150 ஆகும். ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட மினியேச்சர் பின்சர் வகையை சேர்ந்த அந்த நாயை மும்பையில் உள்ள பிரபல கால்நடை மருத்துவர் சங்கீதா வெங்சர்க்கார் … Read more

சென்னையில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 2 புதிய மெட்ரோ நிலையங்கள் எவை தெரியுமா?

திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் சென்னை மாநகரிலுள்ள மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் தடத்தின் நீட்டிப்புத் திட்டம், வண்ணாரப்பேடை முதல் விம்கோ நகர் வரை 19 கி.மீ பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் நீலம் மற்றும் பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றது. அதில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் – சுமுக தீர்வு காண திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தீவிரம்: கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒருசிலஇடங்களில் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு சுமுக தீர்வு காண தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பிறகு, கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை திமுக பிரித்து வழங்கியது. சில இடங்களில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. … Read more

சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசம்

அரகண்டநல்லூரில் சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாக்கு தீயில் எரிந்து சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காமராஜர் வீதியில், காமராஜ் (60) என்பவருக்குச் சொந்தமான சாக்கு குடோன் உள்ளது.. இங்கு சணல் சாக்கு மற்றும் பிளாஸ்டிக் சாக்குகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடோன் மூடப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினருக்கும், அரகண்டநல்லூர் போலீசாருக்கும் தகவல் … Read more

சென்னையில் இன்று 2 புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு.. எங்கெங்கு தெரியுமா.?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விமான நகர் வரை பயணிகள் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களும் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு இயக்கப்படுகிறது. இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more