கண் பார்வை பறிபோன ஏழை தொழிலாளிக்கு, வீடு கட்டிக் கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

கன்னியாகுமரி மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் கண்பார்வை இழந்த ஏழை தொழிலாளி ஒருவருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது. தோட்டைக்காடையில், வேலைக்கு போக முடியாமல், பாலடைந்த வீட்டில் வசித்து வந்த வினுகுமார் என்பவர், தன் குடும்ப நிலை குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிபின்ராஜிடம் கூறி உதவி கோரியுள்ளார். இதையடுத்து அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிறுக சிறுக பணம் திரட்டி, 4 லட்ச ரூபாய் மதிப்பில், தளபதி இல்லம் என்ற … Read more

மார்ச் 13: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.12 வரை மார்ச்.13 மார்ச்.12 … Read more

சுட்டெரிக்கும் வெயில்: சூட்டை தணிக்க திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் குவிந்த பயணிகள்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. சில வாரங்களாக குமரி மாவட்டத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் வற்றத் துவங்கியுள்ளது.. இந்த நிலையில், குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவு குறையாமல் இருக்கிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியை நோக்கி தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து … Read more

கருப்பு மிளகு, கிராம்பு வீட்டுல இருக்கா? இம்யூனிட்டி பற்றி கவலை வேண்டாம்!

Health benefits of black pepper and cloves in tamil: நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில எளிய மசாலாப் பொருட்கள் ஆச்சரியமளிக்கும் ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. ஆனால் நாம் பெரும்பாலும் உணவை உட்கொள்ளும்போது, அவற்றை விலக்கி வைக்கவே விரும்புவோம். ஆனால் அவை தரும் நன்மைகளைப் பற்றித் தெரிந்தால், இனி நீங்கள் அவற்றை ஒதுக்க மாட்டீர்கள். அத்தகைய அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள மிளகு மற்றும் கிராம்பின் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம். கொரோனா நோய் … Read more

9ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. காமகொடூரன் மீது பாய்ந்து போக்சோ..!

மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்,  அதே பகுதியை சேர்ந்த கோபி (வயது 20) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதனை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் இது குறித்து … Read more

உச்சி வெயிலில் பால் குடம் எடுத்துச் சென்ற பக்தர்கள்; சாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்த இஸ்லாமியர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மீனாட்சிபுரத்தில் உச்சிவெயிலில் பால் குடம் எடுத்துச் சென்ற பக்தர்களுக்கு வெயில் தெரியாமல் இருக்க, இஸ்லாமியர்கள் வழி நெடுகிலும் சாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்தனர். அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலில், மாசி திருவிழாவுக்காக விரதமிருக்கும் பக்தர்கள் திருவிழா முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு கோவிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்று விரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காரைக்குடி முத்தாளம்மன் கோவிலில் இருந்து பால்குடத்தை தலையில் சுமந்து சென்ற பக்தர்கள், செக்காலை சாலையிலுள்ள … Read more

தமிழகத்தில் இன்று 95 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 35 பேர்: 223 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,910. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,714. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

அமைச்சர் கீதா ஜீவனை கண்டித்து முக்காடு போடும் போராட்டம்

கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவனை கண்டித்து, தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் பொதுமக்கள்  ஈடுபட்டனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தில் இருக்கும் 12 ஊராட்சிகளை கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, மக்களின் கோரிக்கையை ஏற்று உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகாவுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி, மின்சாரம் மற்றும் தொடக்கக் கல்வியை தவிர மற்ற அனைத்து அரசு துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உள்ளாட்சி, … Read more

விஜய்க்கு அடுத்த பட ஜோடி ரெடி? அட, இவங்க தனுஷ் கூட நடிச்சவங்க ஆச்சே..!

Mehreen Pirzadaa may joins Vijay next movie: நடிகர் விஜய்யின் 66-வது படத்தில், தனுஷ் பட நடிகை மெஹ்ரீன் பிர்சாதா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், விஜய்யின் அடுத்தப்படமாக, ‘தளபதி 66’ படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படம்  தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. விஜய்யுடன் … Read more

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வைகோ வலியுறுத்தல்.!

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து தமிழக ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகொ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் … Read more