பேராசிரியர்கள் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..! கடிதத்தால் சிக்கிய பேராசிரியர்கள்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கல்லூரி பேராசிரியர்கள் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில், பேராசிரியர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கணேசன் – மாடத்தி தம்பதியின் மூத்த மகள் இந்து பிரியா, புளியங்குடி மனோ கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கல்லூரிக்கு செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தடையை மீறி சில மாணவிகள் செல்போனை கொண்டு சென்றுள்ளனர். அதனை இந்து … Read more

நீதிமன்றங்களை அதிகம் திறப்பது பெருமை இல்லை: உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் 

கொடைக்கானல்: நீதிமன்றங்களை அதிகம் திறப்பது பெருமை இல்லை. குற்றங்களை குறைத்து நீதிமன்றங்களை இழுத்துமூடுவது தான் பெருமை. ஏனென்றால் நீதிமன்றங்கள் குறைவதால் ஊரில் சண்டையும் இல்லை, குற்றங்களும் இல்லை என்று பொருள், என உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் பேசினார். கொடைக்கானலில் நீதித்துறை நடுவர் கூடுதல் நீதிமன்றம்-2 (ஜேஎம் 2) திறப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் நீதிமன்றத்தை திறந்துவைத்து பேசியது: “நீதியை விரைவில் கொடுக்கவேண்டும் என்ற காலகட்டம் தற்போது உள்ளது. தேவையில்லாமல் வாய்தா வாங்கக்கூடாது. … Read more

'ஹாலிடே ஜாலிடே' ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிறு வார விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் சுற்றலா தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி வெப்பம் வீசுவதால், இன்று ஞாயிறு விடுமுறையை … Read more

ரூ.1.5 லட்சம் வரி விலக்கு கிடைக்கும் PPF சேமிப்பு; முதலீட்டை இரட்டிப்பாக்க சூப்பர் ஐடியா

Double your PPF income and Tax exemption details in tamil: பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு என்பது அதிக வரி விலக்கு கிடைக்க கூடிய சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும். இருப்பினும் சில நிபந்தனைகள் காரணமாக இந்த திட்டத்தில் அதிகம் முதலீடு செய்ய முடியாது. ஆனால் இந்த ஐடியாவை பின்பற்றுவதன் மூலம் உங்கள் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கலாம். அது என்ன என்பதை இப்போது பார்ப்போம். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கு … Read more

தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு ஏற்படும்? எச்சரிக்கை விடுக்கும் Dr அன்புமணி இராமதாஸ்.!

நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி பாதிப்பு: போக்குவதற்கு நடவடிக்கை தேவை என்று பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் அனல் மின்நிலையங்களில்  மின்னுற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், 4320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக 2240 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகியுள்ளது! தமிழகத்தின் 5  அனல் மின் நிலையங்களுக்கு தினமும் 60,000 டன் … Read more

மருந்தகங்களில் இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர்

மருந்தகங்களில் இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் லேப் டெக்னீசியன்களின் கருத்தரங்கில் பேசிய அவர், லேப் டெக்னீசியன்கள் 8 கோரிக்கைகளை வழங்கியுள்ளதாகவும், அதைப் பரிசீலிக்கக் குழு அமைத்து 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  Source link

பெற்றோரை இழந்து ஒரு வேளை உணவுக்கு வழியின்றி தவிக்கும் 3 குழந்தைகள்

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து தங்கை மற்றும் தம்பியுடன் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் தங்களை பாதுகாத்து அரவணைக்க வேண்டும் என முதல்வர் மற்றும் ஆட்சியர் உதவிட வேண்டும் என பத்தாம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் வசித்தவர் தையல் தொழிலாளி லோகநாதன். இவரது மனைவி வேண்டா. இவர்களுக்கு கார்த்திகா(15), சிரஞ்சீவி(14), நிறைமதி(10) ஆகிய 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். … Read more

மதுரை: உற்சாகமாக நூற்றுக்கணக்கானோர் பற்கேற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தில் உள்ள சாவட்டான் கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விவசாயம் செழிக்க மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்நிலையில், இன்று மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில், மீன்களை பிடிப்பதற்காக நள்ளிரவு முதலே ஏராளமான பொதுமக்கள் கண்மாய் கரையில் காத்திருந்தனர். இதையடுத்து அதிகாலையில் கிராம பெரியவர்கள் வெள்ளை துண்டை வீசியவுடன் ஒற்றுமையாக … Read more

ஆவடி OCF நிறுவனத்தில் 180 பணியிடங்கள்; 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

OCF india invites application for 10th and ITI apprentice training: தமிழகத்தின் ஆவடியில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆடை தொழிற்சாலையில் (Ordinance Clothing Factory) 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 180 பயிற்சியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.சி.எஃப்-ல், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஓ.சி.எஃப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 180 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு … Read more

இது பெரும் அநீதி., வெளியான அறிவிப்பால் பெரும் அதிர்ச்சியில் டாக்டர் இராமதாஸ்.!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான ஆண்டு வட்டி விகிதம், 2021-22 ஆம் ஆண்டில், 8.10% ஆக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஒரே நேரத்தில் 0.40% குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது. வருங்கால வைப்பு நிதி மீது கடந்த 44 ஆண்டுகளில் இது தான் மிகவும் குறைவான வட்டியாகும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவில் அரசுத்துறை, … Read more