மதவெறியைத் தடுக்க கிராமங்களில் சமூகநீதிக் குழுக்கள் உருவாக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

விருத்தாசலம்: கிராமங்களில் மதவெறி தூண்டப்பட்டு வருவதால் அரசே சமூகநீதிக் குழுக்களை உருவாக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று கடலூர் வந்திருந்தபோத செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நீட் விலக்கு மசோதாவை தமிழக முதல்வர் நிறைவேற்றி வரலாறு நிகழ்வை ஏற்படுத்தி உள்ளார். ஒத்திசைவு பட்டியலில் உள்ள பொருள் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றினால் என்னவாகும் என்ற விவாதம் தற்போது … Read more

"பாஜகவின் வேலை தமிழகத்தில் பலிக்காது; இது பெரியார் மண்"- கனிமொழி பேச்சு

கர்நாடகாவில் பள்ளி மாணவிகளின் உடை அணியும் உரிமையை கூட பாஜக நிர்பந்திக்கிறது; ஆனால், இதனை தமிழகத்தில் அவர்கள் செய்ய முடியாது; ஏனெனில் இது பெரியார் மண் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். மாநகராட்சியின் 17-வது வார்டான பழைய பேட்டை பேருந்து நிலையம் முன்பாக திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை … Read more

உஷார்… இந்த தவறை செய்தால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

Southern railways news in tamil: ரயில் தண்டவாளங்களைக் கடந்து செல்வதைத் தடுக்கக் கோரியும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், தெற்கு ரயில்வே புதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ரயில்வே பாதுகாப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.  மேலும், ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங்களை கடப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு  6 மாத சிறை … Read more

சமையல் செய்யும் மூதாட்டிக்கு நடந்த விபரீதம்.. திருநெல்வேலியில் நடந்த சோகம்..!

சமையலறையில் இருந்து தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள்  என்ற மனைவி இருக்கிறார். சம்பவதன்று அவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் உடையில் தீப்பற்றியது. உடலில் தீப்பற்றியதால் அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று.! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று.! –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 3 ஆயிரத்து 86 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 590 பேருக்கும், கோவையில் மேலும் 569 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 14 ஆயிரத்து 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்த நிலையில், 56 ஆயிரத்து 2 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

தமிழகத்தில் இன்று 3,086 பேருக்குக் கரோனா: சென்னையில் 590 பேருக்கு பாதிப்பு; 14,051 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,31,154. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,45,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,37,265. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,86,372 பேர் வந்துள்ளனர். சென்னையில் 590 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

தமிழகத்தில் ஒருநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,086ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 1,06,514 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,086ஆக உள்ளது. சென்னையில் நேற்று 663 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 590ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 14பேரும், அரசு மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,887ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 66,992 … Read more

சென்னையில் சீரியல் நடிகையை வேட்பாளராக இறக்கிய பா.ஜ.க: ஷாக் புகாரைக் கூறும் எதிர்கட்சிகள்!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வரும் பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 200 இடங்களில், 165 வார்டுகளில் திமுக வேட்பாளர்களை நிறுத்துகிறது, மீதமுள்ளவற்றை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிகே மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்குப் பங்கிடுகின்றன. குறிப்பாக திருவொற்றியூர் குடியிருப்பு விபத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை காப்பாற்றிய … Read more

ஒரேயொரு டிவிட்., மூன்று மாநில முதல்வர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ராகுல்காந்தி.!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் கருத்துக்கு, அசாம், திரிபுரா, மணிப்பூர் மாநில முதலமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா என்று டிவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்த பதிவில், வட கிழக்கு மாநிலங்களை குறிப்பிடாமல் பதிவிட்டு இருந்தார். இதற்க்கு வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களை ராகுல்காந்தி மறந்து விட்டாரா? என்று வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும்.,குஜராத் … Read more

சிவசங்கர் பாபாவுக்கு உலகத் தரத்தில் சிகிச்சை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு விஐபிகளுக்கு வழங்கப்படும் உலகத் தரத்திலான சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனையில் அளிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் தனது சகோதரருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு … Read more