திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் இளைஞர் ஒருவர் பலி; 50 பேர் காயம் <!– திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில்… –>
புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். முத்தாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இருநூற்றுக்கு மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற காளை முட்டியதில் கீழப்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்கிற இளைஞர் உயிரிழந்தார். Source link