Tamil News Today LIVE: தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது 14 ஆம் தேதி விசாரணை

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் 99-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update:  நீட் ஒழிப்பிற்கான ரகசியமே பாஜகவிற்கு அடிமையாக இல்லாமல் இருப்பது தான் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். India News Update: மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பறிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். ஆளுநரிடம் இருந்து நீட் தேர்வு … Read more

திமுக அமைச்சரின் தாயார் காலமானார்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!!

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தற்போது தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தா மோ அன்பரசன். இவர் தாயார் ராஜாமணி அவர்கள் வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.  தற்போது சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்விக இல்லத்தில் ராஜாமணி  உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அமைச்சரின் இல்லத்திற்கு சென்று அமைச்சரின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து மற்ற அமைச்சர்களும் … Read more

திருச்சியில் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை – 7 பேர் கைது <!– திருச்சியில் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து … –>

திருச்சியில் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை, மருந்துகளை சட்டவிரோதமாக சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் காட்டூரை சேர்ந்த 2 பேர் மற்றும் கல்லுக்குழி, முடுக்குப்பட்டியை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 7 பேரைகைது செய்து அவர்களிடம் … Read more

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்துகுடியரசுத் தலைவர் உத்தரவிட் டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்தாண்டு நவம்பர் மாதம் பதவி யேற்றார். கொலீஜியம் பரிந்துரை இந்நிலையில், முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க … Read more

“90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்”- உயர்நீதிமன்றம் வேதனை

காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காவல்துறையில் ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய சரியான தருணம் இது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், தவறான புகார் … Read more

மஞ்சள், அவுரிநெல்லி, காளான்… புற்றுநோயை தடுக்கும் 5 சூப்பர்ஃபுட்கள்!

 Foods to help lower your cancer risk tamil: சில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டவையாக உள்ளன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வகை உணவு புற்றுநோயைத் தடுக்கும் அல்லது நிறுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை. காய்கறிகள் மற்றும் பழங்களின் ஆரோக்கியமான உணவு, இதய நோய், நீரிழிவு மற்றும் சாத்தியமான புற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நோய்களைத் தடுப்பதில் முக்கியமானவையாக உள்ளன. ஒவ்வொருவரும் எந்த வகையான உணவைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தங்கள் … Read more

சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி.!

சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட புகாரில் அதிமுகவினர் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட சென்னை வடக்கு (கிழக்கு), சென்னை புறநகர், சேலம் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்கள் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரச்சாரம் <!– நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டர். முன்னதாக வாக்காளர்களை கவரும் வகையில் நடன கலைஞர்கள் நடனமாடினர்.   ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அபூபக்கர் சித்திக் உடலில் வண்ண விளக்குகளையும், பந்துகளையும் கட்டிக் கொண்டு ஊர்வலமாக … Read more

கடந்த டிசம்பரில் இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்கள் சென்னை திரும்பினர்: தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 9 பேர்நாடு திரும்பினர். அவர்கள் சொந்தஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த ஆண்டு டிச.18-ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 நாட்களில் 56 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்க மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை … Read more