சென்னை || நாடக காதலனால் பள்ளி மாணவி தற்கொலை.! சிக்கிய பரபரப்பு கடிதம்.! 

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை, நாடக காதலன் ஏமாற்றியதால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அந்த பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  மாணவி தற்கொலை சம்பவத்தை அறிந்த மதுரவாயல் … Read more

பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் – கமல்ஹாசன் <!– பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் – கமல… –>

சென்னை மாநகராட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் என தெரிவித்தார். ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தலைவர்களை தேடுவதை விட்டுவிட்டு, சமூக சேவகர்களை நாம் தேட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் தக்கவைத்த ஏழ்மையை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரம் … Read more

பிப்ரவரி 6: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,10,882 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

1000வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

இந்தியா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கு இந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்று ஒரு நாள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம், அகமதாபாதில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா. இதையடுத்து, மே.இ.தீவுகள் பேட்டிங் செய்யத் தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய … Read more

பா.ம.க. வேட்பாளரை கடத்தி மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா? – கொந்தளிப்பில் மருத்துவர் இராமதாஸ்.!

வேலூர் மாநகராட்சி பா.ம.க. வேட்பாளரை கடத்தி மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா? என்று,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, “வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை  திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது! வேலூர் … Read more

செங்கல்பட்டில் சாலையின் தடுப்புக்கட்டையில் ஏறி கவிழ்ந்த கண்டெய்னர் லாரி.! <!– செங்கல்பட்டில் சாலையின் தடுப்புக்கட்டையில் ஏறி கவிழ்ந்த க… –>

செங்கல்பட்டு அருகே, சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீது மோதிய கார் குட்டிக்கரனம் அடித்து நின்றது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை, பின்னால் ரெனால்ட் டஸ்டர் காரில் வந்த நபர் முந்த முயற்சித்துள்ளார். காருக்கு வழி விடுவதற்காக லாரியை ஓட்டுநர் ஓரங்கட்டியபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டையில் லாரி ஏறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இதற்கிடையே, கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில், காரை ஓட்டுநர் … Read more

புதுச்சேரியில் தேர்தல் காலத்தில் வாங்கிய கரோனா பரிசோதனை சாதனங்கள் மாயம்: ஆளுநரிடம் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாங்கிய கரோனா பரிசோதனை சாதனங்களில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டர், பிபிஇ கிட், நான்கு சர்க்கர நாற்காலிகள் மாயமாகியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய டிஜிட்டல் தெர்மோ மீட்டர், பிபிஇ கிட், குப்பை தொட்டி மற்றும் நான்கு சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அளிப்பதற்காக நலவழித் துறையினர் மூலம் வாங்கி … Read more

ராகுல் காந்தியின் போலி நம்பிக்கை

தவ்லீன் சிங், கட்டுரையாளர் மோடியின் பாரதீய ஜனதா கட்சியில் ஆபத்தான மற்றும் நேர்மையற்ற ஒரு பெரிய விஷயம் உள்ளது. ஆனால், மக்களவையில், ராகுல் காந்தியின் நீண்ட மற்றும் பரபரப்பான பேச்சைக் கேட்கும்போது, காங்கிரஸ் கட்சி உருவாக்கும் ஒரே சவாலாக அவர் இருப்பார் என்றால், மோடி தொடர்ந்து மிகவும் பலமாக இருப்பார் என்பதை உணர வேண்டும் என்று தவ்லீன் சிங் எழுதுகிறார். கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையைக் கேட்டபோது, ​​நரேந்திர மோடி ஏன் இரண்டு … Read more

தி.மலை., அக்னிகலசம் : பின்னணியில் திமுக அமைச்சர்? 1 லட்சம் அக்னி கலசம் நிறுவினால் என்ன செய்வீர்கள்? இயக்குனர் கவுதமன் ஆவேசம்.! 

கடந்த 1989ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில், வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் நிறுவப்பட்டது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கான பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம், பின்னர் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே மீண்டும் நிறுவப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர், திருவண்ணாமலை மாவட்ட … Read more

சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.! <!– சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடை… –>

சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பாண்டி பஜாரில் உள்ள ரெயின்போ ஆர்கெட் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த துணிக்கடையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவ்வழியாக சென்ற மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர். அதே … Read more