தமிழக செய்திகள்
Tamil News Today LIVE: இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும்!
Go to Live Updates Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 95-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: ஆளுநர் டெல்லி பயணம் திடீர் ரத்து! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாட்கள் பயணமாக இன்று டெல்லி … Read more
95-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.!!
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி காட்சியில் சிக்கிய இருவர் <!– வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட… –>
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 2 மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இரவில் வந்த 2 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source … Read more
திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்ட கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு
சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோரும், உறுப்பினர்களும் பதவியேற்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் உட்பட 3 பேரையும், உறுப்பினர்களாக 21 பேரையும் நியமித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இவர்கள் பதவியேற்கும் … Read more
சீட் மிக்ஸ்: பிஸியான வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு உதவும் எளிதான ஆரோக்கிய குறிப்பு!
குளிர்காலத்தில், தாராளமாக வெல்லம் மற்றும் சூடான மசாலாப் பொருட்களுடன் விதைகளை அதிகளவில் உட்கொள்ளுமாறு நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது பருவகால ஆரோக்கியத்திற்கான பழமையான ஆயுர்வேத செய்முறையாக இருப்பதால், இதைப் பின்பற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும். இன்றைய பிஸியாக வாழ்க்கையில், விதைகள் உங்கள் ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும். ஊட்டச்சத்து நிபுணர், ஜூஹி கபூர் இந்த சிக்கலற்ற சீட் மிக்ஸ் ரெசிபியை (seed mix recipe) நம்மிடம் கொண்டு வருகிறார், விதைகளை உட்கொள்வதற்கான சிறந்த விகிதம்’ ஆளி விதைகள் … Read more
தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து..!
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 142 நாட்கள் கழித்து தமிழக அரசிற்கு ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 9:55 மணிக்கு டெல்லிக்கு புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின்போது … Read more
நாமக்கல்லில் கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி விருந்து <!– நாமக்கல்லில் கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு வழங்கப்பட்ட … –>
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. போதமலை கள்ளவழி கருப்பனார் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று முப்பூசை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற விழாவில் கருப்பனாருக்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு காணிக்கை கொடுக்கப்பட்ட விலங்குகளை பலியிட்டனர். விடிய விடிய நடைபெற்ற இவ்விழாவில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். Source link
`மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தால் தமிழகத்தில் இதுவரை 48.50 லட்சம் பேர் பயன்
சென்னை: தமிழக சுகாதாரத் துறை சார்பில் `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று,மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்ள தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை உள்ளிட்ட சேவைகள் இதில்வழங்கப்படுகின்றன. முதல்கட்டமாக 50 வட்டாரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்பசுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், … Read more