தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது.!

சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த … Read more

மின்வாரியத்தில் ரூ.17,000 கோடி இழப்பு; நிர்வாகத்தை சீரமைக்க துணிச்சலான முடிவுகளை எடுக்கவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மின் உற்பத்தியை அதிகரிப்பது, நிர்வாக சீர்கேடுகளை களைவது போன்றவற்றின் மூலம் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான துணிச்சலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழக மின்சார வாரியத்தின் இழப்பு 2020-21ம் ஆண்டில் ரூ.17,000 கோடியாக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மின்சார வாரியத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத இழப்பு ஆகும். மின்வாரிய இழப்பு ரூ.12,800 கோடி என்ற அளவில் … Read more

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு; கணவர் பரபரப்பு புகார்!

அண்ணாநகரில் உள்ள வீட்டை, ‘சட்டவிரோத’ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக, அதிமுக முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா மீது அவரது 2 வது கணவர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ-யின் மேல்முறையீட்டுக் குழுவின் தலைமை அதிகாரியாகவும், டெல்லியின் லோக்-அதாலத் நீதிமன்றத்தின் இணை உறுப்பினராகவும் ராமசாமி உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில், ஜனவரி 13 ஆம் தேதி அதிகாலையில் அண்ணாநகர் மேற்கில் உள்ள தங்களது வீட்டிற்கு மகளுடன் சென்றிருந்தேன். அப்போது, … Read more

சென்னை புத்தக கண்காட்சிக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு.!

சென்னையில் புத்தகக் கண்காட்சிக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகக் கண்காட்சி கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் காரணமாக புத்தகக் கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த நிலையில் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி … Read more

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதானவன் லாக்அப்பில் உயிரிழந்தவன் கொலையாளி என தகவல் <!– நெல்லையில் திருட்டு வழக்கில் கைதானவன் லாக்அப்பில் உயிரிழ… –>

நெல்லையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவன் லாக்அப்பில் உயிரிழந்த நிலையில் அவன் ஒரு கொலையாளி என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலப்பாளையத்தை சேர்ந்த சுலைமான் என்பவனை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் பைக் திருட்டு வழக்கில் கைது செய்தனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் சுலைமான் திடீரென உயிரிழந்தான். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கொக்கிரகுளம் அருகில் தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட … Read more

ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: ரயில்வே துறை அறிவிப்பு

ரயில்வே பணிகளில் சேர விரும்புவர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி, பணம் கொடுத்து ஏமாந்து போவதான செய்திகள், ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளன. ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வ ரயில்வேபணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு முகமை (ஆர்ஆர்சி) ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ரயில்வே … Read more

கருத்தடைக்கு பின் 3வது குழந்தை: இலவச கல்வி வழங்கிட ஐகோர்ட் உத்தரவு

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யும் போது மருத்துவ அலட்சியத்தால் பிறந்த சிறுமிக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விக்னேஷ்குமார் – தனம் தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பெற்ற பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில், 2014ல் தனம் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார். பின்னர், மற்றொரு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் செல்கையில், மீண்டும் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, … Read more

மாமனாருக்கு ஒன்னு, மருமகளுக்கு ஒன்னு., காட்டுமன்னர்கோவில் பேரூராட்சியில் திமுக செய்த சம்பவம்.!

காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியின் பக்கத்து பக்கத்து வார்டுகளில், திமுகவை சேர்ந்த மாமனார் மற்றும் மருமகள் போட்டியிடும் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் : காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர்களில் ஏற்கனவே போட்டியிட்ட திமுகவின் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் தலைவர் பதவிக்கு களமிறங்கியுள்ளார். இதேபோல் 5 வது வார்டில் தமிழ்ச்செல்வன் என்பவரும், 10-வது வாரத்தில் … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய பதைபதைக்கு சிசிடிவி காட்சி <!– தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய பதைபதைக்கு… –>

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரயில் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்த புவனா என்பவர் நேற்று காலை ராமேஸ்வரம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய புவனா மண்டபம் கேம்ப் ரயில் நிலையம் எதிரே உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரத்தில் … Read more

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்பாக பாஜக உள்ளாட்சி தேர்தல் மாநில குழு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிப்.6 (இன்று) முதல் 9-ம் தேதி வரை முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன்படி, 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தாம்பரம், ஆவடி … Read more