நீட் தேர்வுக்கு நாங்கள் காரணம் இல்லை., திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.!

திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசால் 2010-இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே மத்தியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவைத் தி.மு.க. விலக்கி கொண்டிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்காது” என்று அ.தி.மு.க. அரசின் 10 ஆண்டு தோல்வியை மறைக்க – “கூவத்தூர்” கொண்டாட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வினைச் செயல்படுத்தி – மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதலமைச்சர் … Read more

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம் <!– சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் நீ… –>

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான கண்ணாம்மாள் என்பவர், தான் பணியாற்றிய காலத்திற்கு ஊதிய உயர்வு, ஊதிய பாக்கி தர மறுக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், மனுதாரரின் பணி வரன்முறைபடுத்தபடவில்லை என்றும், தவறுதலாக அவரது பெயர் ஆசிரியருக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வு பெற தகுதியில்லை என்றும் அரசு … Read more

பிப்ரவரி 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,04,762 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ : எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு … Read more

மாடர்ன் உடை, கூளிங் க்ளாஸ்… ஆளே மாறிப்போன கண்ணம்மா… வைரல் புகைப்படம்

Bharathi Kannamma Roshini Haripriyan Stylish Photo : விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே சந்தேகம் வந்தால் என்னவாகும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. அருண்பிரசாத் பாரதியாகவும், ரோஷ்னி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாகவும் நடித்து வந்த இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். நன்றாக போய்க்கொண்டிருந்த … Read more

மதுரையில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் சீமான்.! வெளியான அறிவிப்பு.! 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார்.  முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு; வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் … Read more

சடன் பிரேக் அடித்த லாரி மீது மோதிய அரசு பேருந்து -20க்கும் மேற்பட்டோர் படுகாயம் <!– சடன் பிரேக் அடித்த லாரி மீது மோதிய அரசு பேருந்து -20க்கும… –>

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி சடன் பிரேக் அடித்ததால்,லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழையனூர் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது இரும்பு லோடு ஏற்றி முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி, போக்குவரத்து நெரிசல் காரணமாக சடன் பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பேருந்து ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தின் முன்பக்கம் … Read more

தமிழகத்தில் 7,000-க்கும் கீழ் குறைந்தது கரோனா தொற்று: சென்னையில் 1,223 பேர் பாதிப்பு – 23,938 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 7,524 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,04,762. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,41,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,28,151. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,223 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

தாலாட்டு சீரியலுக்கு மாறிய ஜீ தமிழ் சீரியல் வில்லி… அப்போ செம்பருத்தி அவ்வளவுதானா?

Tamil Serial Actress Mounica Leave In Sembaruthi Serial : சின்னத்திரையில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் இருந்து சமீப மாதங்களாக முன்னணி நட்சத்திரங்கள் பலர் விலகி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் இந்த சீசனை நட்சத்திரங்கள் விலகும் சீசன என்று கூறி வருகின்றனர். நடிகர் நடிகைகள் விலகல் இந்த சீரியலுக்கே பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் நிலையில், உள்ளது. இந்த சறுக்கலை தற்போது ஜீதமிழ் சீரியல் சந்தித்துள்ளது. ஜீ தமிழில் கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமான ஓடி … Read more

#நீட் || வரும் 8 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் – சபாநாயகர் அப்பாவு.! 

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து, வருகிற 8ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்ட மசோதா ஏற்றப்பட்டு, ஜனாதிபதி … Read more

வேட்புமனு நிராகரிப்பு-வாக்குவாதம், சாலை மறியல் <!– வேட்புமனு நிராகரிப்பு-வாக்குவாதம், சாலை மறியல் –>

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, பல்வேறு காரணங்களால் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்றன.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பமனுத் தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி 23 வார்டில் அதிமுக நிர்வாகியான சரவணன் நதி என்பவரின் மனைவி தாரணி வேட்பு மனு தாக்கல் செய்தார். … Read more