#BigBreaking || நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் – சற்றுமுன் ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை.!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சற்று முன்பு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நீட் விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும் என்றும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது நடவடிக்கை.. மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற அரசியல் பிரமுகருக்கு காலில் எலும்பு முறிவு..! <!– சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது நடவடிக்கை.. மாடியில… –>

விருதுநகரில் கட்சிக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அரசியல் பிரமுகரை போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் மாடியில் இருந்து குதித்து, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 28-ந் தேதி சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் விளைவிப்பது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு … Read more

ஒரே நாளில் இரு தேர்வுகள்… – கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ. 4 லட்சம் மானியம்; தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu construction workers : கட்டடத் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளைக் கட்டவோ அல்லது வாங்கவோ, தமிழக அரசு வழங்கும் ரூ. 4 லட்சம் மானியத் தொகையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் வாரியம் அறிவித்துள்ளது. முதல்வர் சட்டமன்றத்தில், கட்டட தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடுகளைக் கட்டிக் கொள்ள ரூ. 4 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள்ளார். கட்டடத் தொழிலாளர்கள் வாரியத்தின் தலைவர் பொன் குமார் இது தொடர்பாக … Read more

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு.? வெளியாகப்போகும் அறிவிப்பு.!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனாவின் மூன்றாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.  குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளின் விளைவாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது.  இதனை தொடர்ந்து, ஊரடங்கு … Read more

"போ சாமி…" என்றதும் அமைதியாக காட்டுக்குள் சென்ற யானை <!– &quot;போ சாமி…&quot; என்றதும் அமைதியாக காட்டுக்குள் சென்ற யானை –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேருந்தை மறிக்க வந்த காட்டு யானையை, பழங்குடியின மக்கள் போ போ என பாசமாக சொல்லி காட்டுக்குள் அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. கோயம்புத்தூரில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து, தூமனூர் பிரிவை கடந்த போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை திடிரென பேருந்து நோக்கி ஆவேசமாக ஓடி வந்தது. பேருந்தில் பயணித்த பழங்குடி மக்கள், யானையை பார்த்து ”போ சாமி” என சத்தமிட, அது அமைதியாக … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின் நாளை முதல் காணொலி பிரச்சாரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். வரும் 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், திமுக … Read more

Tamil News Today Live: நீட் விலக்கு – அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக

Go to Live Updates Tamil Nadu News Updates: ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே சகுரா பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என ஜம்மு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மனுத் தாக்கல் நிறைவு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சிக்கு 6,818 பேரும், நகராட்சிக்கு … Read more