இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை <!– இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 29 ஆய… –>

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பட்டப்பகலில், நகையை அடகு வைத்து கொண்டு சென்ற ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருமண விழாக்களில் மைக் செட் அமைக்கும் வேலை பார்த்து வரும் ஜெய் கணேஷ் என்பவர், நேற்று மாலை காமராஜ் நகரில் உள்ள வங்கியில் நகையை அடகுவைத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை … Read more

பிப்ரவரி 9: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,24,476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.8 வரை பிப்.9 பிப்.8 … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: மீண்டும் தமிழக காவல்துறைக்கு திரும்பியது; சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மார்ச் 29, 2012ம் தேதி திருச்சியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து சிபிஐ 2018ம் ஆண்டு விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் தமிழக காவல்துறை விசாரணைக்கு திரும்பியுள்ளது. திமுகவின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், மார்ச் 29, 2012 அன்று அதிகாலை 5 மணிக்கு நடைபயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே போனவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவருடைய … Read more

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022 -ஐ முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத மற்றும் விதிமீறல் தொடர்பாக 12 புகார்கள் பதியப்பட்டுள்ளன.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022 -ஐ முன்னிட்டு  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 … Read more

அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் <!– அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி எடப்பாடி பழனிச… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார். இதேபோன்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், ஓசூர், சேலம் மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். Source link

சமூக நீதி கூட்டமைப்பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அறிவிப்பு

திருச்சி: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இடம்பெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி ஆகியோர் அனுப்பிய கடிதத்தின் விவரம்: திமுக முன்னெடுத்துள்ள அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பிரதிநிதிகளாக தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகம்மது பசீர் எம்.பி, மாநில துணைத் … Read more

பிரம்மாண்ட வெற்றியே இலக்கு… கொங்குவில் சினிமா இயக்குனரை களம் இறக்கும் தி.மு.க!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட இலக்காக கொண்டு தீவிரமாக செயல்பட்டுவரும் திமுக, கொங்குவில் சினிமா இயக்குனர் கரு பழனியப்பனை திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய களம் இறக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக தவறவிட்டாலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்று திமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி மட்டுமல்ல, கோவை மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலம் … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்.. ராஜபாளையத்தில் நிகழ்ந்த சோகம்..!

தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலி தொழிலாளி ரயில் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் கந்தவேல். இவருக்கு திருமணமாகி மரகத வள்ளி என்ற மனைவி இருக்கிறார். கட்டிட தொழிலாளியான கந்தவேல் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் பின்புறம் … Read more

கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு ; கார் ஓட்டுனரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த உறவினர்கள் <!– கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு ; கார் ஓட்ட… –>

கோயம்புத்தூரில் 4 சக்கர தள்ளுவண்டியில் சாலையில் சென்ற மாற்றுத்திறனாளி முதியவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த 66 வயது நடராஜன் என்ற முதியவர், ரத்தினபுரி பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா ஃபார்ட்சியூனர் கார் எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் … Read more

திமுக ஆட்சியால் வேதனைப்படும் மக்கள், அதிமுகவுக்கு வெற்றியைத் தருவர்: ஓபிஎஸ்

கிருஷ்ணகிரி: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஒரு மகத்தான, மாபெரும் வெற்றியை பெரும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாண்டு காலம் அதிமுக அரசு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசு செய்த சாதனைகளை இன்றைக்கு தமிழக மக்கள் எண்ணிப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சி வந்ததற்கு பின்னால், அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத ஒரு சூழல் இருக்கிறது என்பதை மக்கள் வேதனையுடன் எண்ணி பார்த்துக் … Read more