கோவில்கள் மட்டும் திட்டமிட்டு இடிப்பு, ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு.!

பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோவில்களை மட்டுமே தமிழக அரசு இடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டிற்கு உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுவை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி தாக்கல் செய்துள்ள மனுவில், 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவிலான நீர்நிலைகள் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இவ்வளவு ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், மாநிலம் முழுவதும் அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள 200 … Read more

குழந்தை திருமணம் – மனமுடைந்து விஷம் அருந்திய சிறுமி உயிரிழப்பு..! <!– குழந்தை திருமணம் – மனமுடைந்து விஷம் அருந்திய சிறுமி உயிரி… –>

திருவாரூர் அருகே குழந்தை திருமணத்தால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற 11-ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 4 ஆண்டுகளுக்கு முன்,சிறுமி 13 வயதாக இருந்த போது ஆண்டிகுப்பத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சிறுமியின் பெற்றோர் மணமுடித்து கொடுத்துள்ளனர். உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, கணவன் வீட்டாருக்குத் தெரியாமல் சொந்த ஊருக்கு ஓடிவந்திருக்கிறார். தற்போது மீண்டும் வந்து குடும்பம் நடத்துமாறு சிவக்குமார் வீட்டார் சிறுமியை வற்புறுத்தத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மனம் நொந்து போன சிறுமி, கடந்த … Read more

கிராம சபை போல ஏரியா சபை, விலையில்லா தரமான குடிநீர்… – மநீம வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மநீம வாக்குறுதிகள்: அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்யப்படும். காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை பரவலான பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும். > கிராம சபை போல, … Read more

மணல் கடத்தல்: கேரள பிஷப், 5 பாதிரியார்கள் கைது – தமிழக சிபிசிஐடி அதிரடி

திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்களை தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பத்தனம்திட்டா சிரோ மலங்கரா டயோசிஸின் பிஷப் சாமுவேல் மார் இரேனியோஸ் மற்றும் பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சாமகலா, ஜோஸ் களவியல் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலியில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், திருநெல்வேலியில் வருவாய், சுரங்கம், காவல்துறை மற்றும் வேளாண்மைத் துறைகளைச் சேர்ந்த பல அதிகாரிகளின் … Read more

#BREAKING || தமிழகம் : பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைப்பு.!

மதுரை அருகே பாஜக பெண் வேட்பாளரின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.  வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தற்போது வேட்பாளர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், மதுரை அருகே பாஜக பெண் … Read more

அனுமதி பெற்றாலும் விளம்பரம் செய்யக்கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள் வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பின்பற்ற உத்தரவிடப்படுகிறது. அதன்படி, எந்த ஒரு … Read more

இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் <!– இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வ… –>

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதை அடுத்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் … Read more

புதுச்சேரியில் மூன்றாம் அலை தாக்கம்: கடந்த 40 நாட்களில் 74 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கரோனா பரவல் காணமாக புதுச்சேரியில் கடந்த 40 நாட்களில் மட்டும் 74 பேர் உயிரிழந்திருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “புதுவையில் நேற்று 2,322 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் தற்போது 3,086 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 538 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுச்சேரியில் ஒரே … Read more

Civic Polls 2022: வாக்குச்சாவடிகள் எங்கே? இனி சென்னைவாசிகள் குழம்ப வேண்டாம்!

Poll info : வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் சென்னைவாசிகள் எங்கே வாக்களிக்க வேண்டும், அருகில் இருக்கும் வாக்குச்சாவடிகள் எது என்பது தொடர்பான பல்வேறு தகவல்களை உடனே பெறும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. http://election.chennaicorporation.gov.in – இணையத்திற்கு சென்று நீங்கள் உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி மேற்கண்ட சேவைகளை பெற்றுக் கொள்ள இயலும். மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி இது தொடர்பாக செய்தியாளர்கள் … Read more

அந்தமான் நகராட்சித் தேர்தல்.. அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

அந்தமான் நிக்கோபார் மாநிலத்தில் வருகின்ற 6.3.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.  இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் – நிக்கோபார் மாநிலத்தில் வருகிற 6-3-2022 அன்று நடைபெற உள்ள அந்தமான் போர்ட்பிளேயர் நகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.               … Read more