கூகுல் பே யில் ரூ 5000.. கார் களவாணியிடம் பேரம்.. காவல் ஆய்வாளர் ஆடியோ..! திருட்டு வழக்கு மோசடி வழக்கான கூத்து <!– கூகுல் பே யில் ரூ 5000.. கார் களவாணியிடம் பேரம்.. காவல் ஆ… –>

கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க மாவட்ட செயலாளாரை கைது செய்யாமல் இருக்க தவணை முறையில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் கூகுல் பே மூலம் பணம் கேட்டுப்பெறும் ஆடியோ வெளியான நிலையில் துணை ஆணையர் கேட்டுக் கொண்டதால் கார் திருடனை கைது செய்யாமல் விட்டதாக பெண் காவல் ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளார். திருட்டு வழக்கு , மோசடி வழக்காக மாற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சென்னை மாதவரத்தை சேர்ந்த பில்டர் ராஜேந்திரன் … Read more

தமிழகத்தில் இன்று 5,104 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: சென்னையில் 839 பேருக்கு பாதிப்பு; 21,027 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 5,104 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,986. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,43,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,72,322 Source link

பிக் பாஸ்; கண்ணீர் விட்டு அழும் ஜூலி… சக போட்டியாளர்கள் கூறியது என்ன?

Bigg Boss Ultimate new promo Julie crying: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கண்ணீர் விட்டு அழும் வகையில் வெளியாகி உள்ள ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று பெயர் பெற்ற விஜய் டிவி, ஹிட் ரியாலிட்டி ஷோக்களை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களாக ஒளிப்பரப்பி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 இப்போது தான் முடிவடைந்தது. ஆனால் பிக் பாஸ் … Read more

#BREAKING : தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு.. இன்றைய நிலவரம்.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

தமிழக மீனவர் சிக்கலைத் தீர்ப்பது குறித்து இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு <!– தமிழக மீனவர் சிக்கலைத் தீர்ப்பது குறித்து இந்திய – இலங்கை… –>

தமிழக மீனவர் சிக்கல் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசும் பேச்சு நடத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற பேச்சில், மீனவர் சிக்கலைத் தீர்க்க இரு நாட்டுக்குழுக்களும் விரைந்து பேச்சு நடத்த ஒப்புக்கொண்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மீட்சிக்குச் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் அங்கீகரித்ததாகவும், இலங்கையின் எரியாற்றல் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளிடையான பிணைப்பை வலுப்படுத்த மக்களிடையான தொடர்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டதாகவும் … Read more

குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரகம் உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு; 50,000+ பேர் வேலையிழப்பு

நாமக்கல்: குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரக உற்பத்தி நிறத்தத்தால் நாள்தோறும் நடைபெறும் ரூ.5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்ட்டுள்ளதுடன், 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என குமாரபாளையம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். குமாரபாளையத்தில் 3,000 மேற்பட்ட கைத்தறிக் கூடங்கள் உள்ளன. இங்கு கைத்தறி ஆடை மற்றும் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நேர்த்தியான முறையில் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் இவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு வாபஸ் பெற கால அவகாசம் நிறைவு

Tamilnadu Localbody Election Update : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து ஆண்டு இறுதியில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும என்று அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பிப்ரவரி … Read more

75,000 ரூபாய்க்கு ஏலம் போன ஒரு எலுமிச்சம்பழம்.. எங்கு தெரியுமா.?

ஈரோடு மாவட்டம் பச்சாம்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் திருவிழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இருபத்தி ஏழாம் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது. பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம், பால் குடம், தீர்த்த குடம், ஆறுமுகக்காவடி மற்றும் அக்னி கும்பம் எடுத்து பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பால், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் … Read more

காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் <!– காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் –>

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நேரடித் தேர்தல் பரப்புரையைத் தவிர்த்து, காணொலி வாயிலாக மக்களை சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், திமுக-வினர் புதிய வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி, அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்குமாறு கேட்டுக்கொண்டார். மாவட்டம் வாரியாக நடைபெற உள்ள காணொலி கூட்டங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளை, வீடு வீடாகச் சென்று விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.  Source link

கணினித் தமிழ் விருதுக்கு பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ‘முதலமைச்சர் கணினித் … Read more