கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: மார்ச் 5-ல் தீர்ப்பு

மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் மார்ச் 5-ல் மதுரை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், … Read more

படகு ஏலத்தை தொடங்கிய இலங்கை… அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலம் விடும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் இலங்கையில் உள்ள ஐந்து துறைமுகங்களில் ஏலம் விடுப்படுகிறது. இந்த ஏலம் விடும் பணி, பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் 135 படகுகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏலத்தின் முதல் நாளிலேயே … Read more

போராடிய கவுரவ  விரிவுரையாளர்கள்., மறைமுகமாக மிரட்டல் விடுத்த தமிழக அரசு – மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.!

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள்  தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மூன்று நாட்களாக போராட்டம் நடத்திய கவுரவ விரிவுரையாளர்களுடன் பேச மறுத்து விட்ட தமிழக அரசு, அவர்களை மறைமுகமாக அச்சுறுத்தி போராட்டத்தை கைவிடச் செய்துள்ளது.  உரிமை கேட்டுப் போராடியவர்களின் கோரிக்கைகளைக் கூட அரசு கேட்க மறுப்பது நியாயமற்றது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 108 … Read more

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் – போலீசார் அறிக்கை <!– பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் … –>

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் – போலீசார் அறிக்கை பெட்ரோல் குண்டு வீச்சில் நந்தனம் பகுதி ரெளடி கைது பாஜகவின் நீட் நிலைப்பாட்டை எதிர்த்து சம்பவம் என வாக்குமூலம் “ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகளில் கைதானவன்”  தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக காவல்துறை அறிக்கை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவன் கைது – போலீசார் மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ மேற்படி … Read more

புதுக்கோட்டை பள்ளி சிறுவன் உயிரிழப்பு: பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எதிர்பாராத விதமாக உயிரிழந்த புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், முதல்வர் ஸ்டாலின் சிறுவனின் பெற்றொர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது 9 வயது மகன் நிதிஷ்குமார் அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பள்ளிக்குச்சென்ற சிறுவன் வகுப்பில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ஆசிரியர்கள் … Read more

‘தி.மு.க-வுக்கு 100 சதவீத வெற்றி; இதை செய்வீர்களா?’ பிரச்சாரம் தொடங்கிய உதயநிதி

Udhayanidhi Stalin Trichy election campaign speech: தாய்மார்கள் முடிவெடுத்துட்டா யாரும் மாத்த முடியாது என்றும் நீங்களே பிரச்சாரம் செய்துடுவீங்க என்றும் உதயநிதி ஸ்டாலின் திருச்சி பிரச்சாரத்தில் பேசியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். … Read more

கோவை : கால்டாக்சி ஓட்டுநர் கொடூர கொலை.. காவல்துறை தீவிர விசாரணை..!

சவாரிக்கு சென்ற ஓட்டுநர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று காயங்களுடன் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் … Read more

திமுக எம்பி தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்ததால் மக்களவையில் அமளி.! <!– திமுக எம்பி தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பிய… –>

திமுக எம்பி  தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.  கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் கணேசமூர்த்தி தமிழில் எழுப்பிய கேள்வியின் முதல் பகுதியை தாம் கவனிக்கவில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதையடுத்து சபாநாயகர் ஒம் பிர்லா மீண்டும் கேள்வியைக் கேட்கும்படி ஆங்கிலத்தில் கூற தாம் தமிழில்தான் கேட்க முடியும் என்று மீண்டும் தமிழில் கேள்வி … Read more