தமிழக செய்திகள்
ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது. பெங்களூருவில் உள்ள பள்ளிகள், புதுமுக கல்லூரிகள் (பியூசி), கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் வாயில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டம் நடத்துவதற்கு, கூட்டம் கூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு கர்நாடகா மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சை தொடர்பான மனுக்களை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களும் பொதுமக்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் … Read more
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர்..தர்ம அடி கொடுத்த உறவினர்கள்.!
பள்ளி மாணவியிடம் அத்து மீறி நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கோர்ட்ஸியா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு வாலிப வயதில் தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியின் கையை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால், மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த … Read more
தடுப்புச் சுவரால் தவித்து நின்ற யானைகள்.. உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே ! <!– தடுப்புச் சுவரால் தவித்து நின்ற யானைகள்.. உடனடி நடவடிக்கை… –>
நீலகிரியில் யானைகள் வழக்கமாக வலசை செல்லும் வழித்தடத்தில் ரயில்வே சார்பில் சுவர் எழுப்பியதால் அவை பரிதவித்து நின்ற காட்சிகள் வெளியான நிலையில், அந்த சுவர் உடனடியாக இடிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூட்டமாக வசிக்கும் இயல்பு கொண்ட யானைகள், தங்களது வழித்தடத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் துல்லியமாக நினைவில் வைத்து, தடம் மாறாமல் செல்லக் கூடியவை. கடந்த 2ஆம் தேதி வீடியோ ஒன்று வெளியானது.அதில் நீலகிரி மாவட்டம் ஹில்க்ரோவ் ரயில்நிலையத்தின் அருகே ரயில் தண்டவாளத்தை ஒட்டி ரயில்வே துறை சார்பில் … Read more
தமிழகத்தில் இன்று 3,971 பேருக்குக் கரோனா: சென்னையில் 742 பேருக்கு பாதிப்பு; 16,473 பேர் குணமடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,24,476. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,44,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,09,032. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,55,771 பேர் வந்துள்ளனர். சென்னையில் 742 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more
அமீர் முத்தம் கொடுக்கவே இல்லை; பாவனி வீடியோ
விஜய் டிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அமீர் மற்றொரு போட்டியாளர் முத்தம் கொடுத்ததாக வெளியான வீடியோ பற்றி ரசிகர்கள் விவாதித்து வந்த நிலையில், பாவனி தனக்கு அமீர் முத்தம் கொடுக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 105 நாட்கள் முடிந்து கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த சீசனில் அனைவரும் எதிர்பாத்தபடி, ராஜு பிக்பாஸ் டைட்டில் வின்னர் … Read more
#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 28 பேர் பலி.!
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more
உள்ளாட்சித் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிப்பு <!– உள்ளாட்சித் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிப்பு –>
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. Source link
பிப்ரவரி 9: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,24,476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more
Tamil News Today Highlights: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு 19-ம் தேதி பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
Tamil Nadu News Today Highlights: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 97-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை! தமிழ்நாட்டில் நீர் நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆவணப்பதிவு செய்ய தடை விதித்து’ அனைத்து … Read more