சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது <!– சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெ… –>

94 வது ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்ப்படமான ஜெய்பீம் இடம்பெறவில்லை. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆயினும் ஆவணப்பட பிரிவில் இந்தியாவை சேர்ந்த இயக்குனர்கள் ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இயக்கிய Writing with Fire என்ற ஆவணப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு ‘Belfast’, ‘CODA’, ‘Don’t … Read more

ஹிஜாப் விவகாரம்: பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது- கமல்ஹாசன்

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கர்நாடக மாநில அரசின் உத்தரவு ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்திலமான தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினார். இதனிடையே, மாணவிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; கூட்டணி வைக்காமல், தனித்து களம் காணும் விஜய் மக்கள் இயக்கம்

Janardhan Koushik  Tamil Nadu: Thalapathi Vijay Makkal Iyakkam to not form alliance in civic polls: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமாக இருந்த இந்த அமைப்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 129 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை பதிவு செய்தது. விஜய் மக்கள் … Read more

தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் நாளை முதல்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  நாளை மற்றும் நாளை மறுநாள் : தென் தமிழக மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  12.2.2022 … Read more

மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் ரோஜா <!– மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்க… –>

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்பாட புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் இலவசமாக வழங்க உள்ளது. முன்னதாக நகரி சட்ட மன்ற உறுப்பினர் ரோஜா தமிழக முதல்வரை சந்தித்து சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழ்மொழி பாடதிட்டத்திற்காக 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டுத்தமிழ் பாட நூல்கள் வகுப்பிற்கு தலா 1000 பிரதிகள் வீதம் இலவசமாய் வழங்க … Read more

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு இன்று தொடக்கம்: ஆங்கில பாடத் தேர்வு தேதி மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்குகிறது. கரோனா பரவல் காரணமாகதமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. சில மாதங்களே வகுப்புகள் நடந்தன. இதனால், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு பதிலாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்கி 16-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்காக தேர்வுத் துறை மூலம் மாநிலஅளவில் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட … Read more

Rasi Palan 9th February 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 9th February 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 9th February 2022: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 9ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

இன்றைய (09.2.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more