நைஜீரியா: பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் நைஜீரியாவில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் பொர்னோ மாகாணத்தில் நேற்று பாதுகாப்புப்படையினர் ரோந்து பணிகு சென்ற வாகனங்களை குறிவைத்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் … Read more

கயானா அதிபருடன் சேர்ந்து மரக்கன்று நட்ட பிரதமர் மோடி

ஜார்ஜ் டவுன், பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். முதல் நாடாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசில் சென்றார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதனை தொடர்ந்து பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கயானா சென்றார். கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read more

இந்தியா, சீனா பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை

லவோஸ், வியட்நாம் நாட்டின் தலைநகர் லவோஸ் நகரில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்றனர். இந்நிலையில் மாநாட்டிற்கு இடையே இந்தியா, சீனா நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை மந்திரி டாங் ஜன் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பும் இடையேயான எல்லைப்பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் … Read more

இந்தியா- கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம்: பிரதமர் மோடி நம்பிக்கை

இந்தியா, கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்றார். இதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022ம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார். இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் … Read more

பாலஸ்தீன ஆதரவாளர்கள் எதிர்ப்பால் ஆஸ்திரேலியா வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து

மெல்போர்ன்: பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது, ஆஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன் நகரத்தின் முக்கிய வீதியாக திகழும் போர்க் ஸ்ட்ரீட் வணிக வளாகத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இது, குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக இருக்கும். இந்தநிலையில், அங்குள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் போர் எதிர்ப்பு ஆர்வலர் ஆமி செட்டால் ஆகியோர், இஸ்ரேல் … Read more

'புதிய முன்னெடுப்புகள் மூலம் இந்தியா-கயானா உறவை வலுப்படுத்துவோம்' – பிரதமர் மோடி பேச்சு

ஜார்ஜ் டவுன், பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணத்தின் முதல் கட்டமாக, நைஜீரியா நாட்டிற்கு சென்றார். அங்கு தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர், பிரேசில் நாட்டிற்கு சென்று அங்கு நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி கயானா நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனுக்கு சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது மந்திரி சபையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர். … Read more

ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

கீவ்: ரஷ்ய – உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகுந்த எச்சரிக்கையுடன் தூதரகம் மூடப்படுகிறது. தூதரக ஊழியர்கள் தங்குமிடமித்தில் இருக்க அறிவுத்தப்படுகிறார்கள். வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை கேட்டால் கீவ் நகரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆயத்தமாக … Read more

இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா அளித்த கூட்டறிக்கை – அங்கீகரித்த ஜி20 நாடுகள்

ரியோ டி ஜெனிரோ: டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் தொடர்பாக இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: உலகளாவிய வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. இது இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 4 … Read more

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 1001வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேவேளை, தொலைதூரம் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை ரஷியா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி … Read more